Close
நவம்பர் 24, 2024 3:19 காலை

புதுக்கோட்டை அரசு முன் மாதிரி மேல் நிலைப் பள்ளியில் தமிழ்க் கூடல் விழா

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடந்த தமிழ்க்கூடல் விழாவில் மாணவருக்கு பரிசளிக்கிறார், கவிஞர் நா. முத்துநிலவன்

புதுக்கோட்டை அரசு முன் மாதிரி மேல் நிலைப் பள்ளியில் தமிழ்க் கூடல் விழா நடைபெற்றது

தமிழ் மன்றத்தை மேம்படுத்தும் விதமாக அரசு உயர் மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே தமிழ் மொழியின் தொன்மை மற்றும் இலக்கண இலக்கியங்கள் மீது பற்றும் ஆர்வமும் ஏற்படுத்தும் வகையில் இவ் விழாவானது நடத்தப்படுகின்றது.

அதனையொட்டி தமிழ்க் கூடல் விழா புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல் நிலைப் பள்ளியில் (29.1.2024) திங்கள் கிழமைத நடத்தப்பட்டது.

விழாவிற்கு பள்ளி முதல்வர் பெ.சிவப்பிரகாசம்  தலைமை வகித்தார். விழாவிற்கு வந்திருந்தவர்களை முதுகலை ஆசிரியர் பிரபு வரவேற்றார்.

 உள்ளாட்சி பிரதிநிதி அன்பு மேரி முத்தாள் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக இப் பள்ளியின் முன்னாள் மாணவரும் தற்போது மருத்துவராக பணி புரிந்து வருபவரும் மத்திய மாநில அரசுகளின் விருதுகளைப் பெற்றவருமான மருத்துவர் எம். பெரியசாமி  கலந்து கொண்டு பேசுகையில். தான் பயின்ற பள்ளியின் பெருமை குறித்தும் வருங்காலத்தில் மாணவர்களாகிய நீங்களும் என்னைப் போல் சிறந்த மருத்துவராக வர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

விழாவில் கவிஞர் நா.முத்துநிலவன்  கருத்தாளராகக் கலந்து கொண்டு தமிழ் வெல்லும் என்ற தலைப்பில் மாணவர்களிடையே பேசுகையில், தாய் மொழிக் கல்வியின் அவசியம் குறித்தும் தமிழ் மொழியின் சிறப்பு குறித்தும்  குறிப்பிட்டார்..

மாணவர்களது கலை நிகழ்ச்சியும் இடம் பெற்றது. இறுதியில் பேச்சு போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியினை பட்டதாரி ஆசிரியர் இன்பராஜ்  தொகுத்து வழங்கினார்.  ஏற்பாட்டுகளை முதுகலை ஆசிரியர் சரவணன், தமிழாசிரியர் தெய்வானை, செல்வராணி உடற்கல்வி ஆசிரியர் சரவணன் ஆகியோர் செய்திருந்தனர். இறுதியாக தமிழாசிரியை இளவரசி அனைவருக்கும் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top