Close
நவம்பர் 1, 2024 11:25 மணி

விருதுநகர் காமராஜர் பொறியியல் கல்லூரியில் விண்வெளி கண்காட்சி

உலக விண்வெளி வாரம் என்பது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் ஒரு சர்வதேச கொண்டாட்டமாகும், மேலும் அவை மனித நிலையை மேம்படுத்துவதில் பங்களிப்பு செய்கின்றன. 1999 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை உலக விண்வெளி வாரம் அக்டோபர் 4 முதல் 10 வரை கொண்டாடப்படும் என்று அறிவித்தது

உலக விண்வெளி வார விழாவை முன்னிட்டு விருதுநகர் காமராஜ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மகேந்திரகிரியில் அமைந்துள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய உந்தும வளாகத்துடன் (IPRC) இணை ந்து 2024 அக். 7 முதல் 9 வரை விண்வெளிக் கண்காட்சியை நடத்தியது.
விண்வெளி அறிவியலில் இஸ்ரோவின் சாதனைகளைப் போற்றவும், விண்வெளி ஆராய்ச்சியின் நன்மைகள் மற்றும் தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்கள் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே விண்வெளி அறிவியலில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
விண்வெளி வார விழாவின் இந்த வருடத்திற்கான கருத்து விண்வெளியும் பருவநிலை மாற்றமும் ஆகும்.
காமராஜ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் செயலாளர் தர்மராஜன் துவக்க உரையாற்றினார்.
ஐ பி ஆர் சி யின் அமைப்புக் குழுத் தலைவர் சுரேஷ் வரவேற்றார். ஐ பி ஆர் சி யின் துணை இயக்குனரும் ஏற்பாட்டுக் குழுவின் தலைவருமான சிவக்குமார் தலைமையுரையாற்றினார்.


மகேந்திரகிரி ஐ பி ஆர் சி யின் முன்னாள் இயக்குனர் கார்த்திகேசன் சிறப்பு விருந்தினராக் கலந்து கொண்டு கண்காட்சியைத் துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில், விண்வெளித் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் சாதனை கள் குறித்தும், விண்வெளிக் கண்காட்சி மற்றும் வார விழாவைக் கொண்டாடுவதன் முக்கியத்துவம் குறித்தும், விண்வெளி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றம் குறித்தும், செயற்கைக்கோள் மேம்பாட்டில் இஸ்ரோ செய்துள்ள முன்னேற்றங்கள் குறித்தும், விண்வெளித் தொழில்நுட்பத்தில் இஸ்ரோவின் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் சிறப்புரையாற்றினார்.
கல்லூரியின் முதல்வர் முனைவர் செந்தில் வாழ்த்துரை வழங்கினார். ஐ பி ஆர் சி யின் அமைப்புக் குழுவின் தலைவர் திருமதி தீபா நன்றியுரை வழங்கினார்.
கல்லூரியின் துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கண்காட்சியை மதுரை , விருதுநகர், கோவில்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பார்வையிட்டுப் பயனடைந்தனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top