Close
ஜூன் 28, 2024 6:26 காலை

ஐதராபாத்தில் பெண்ணை தாக்கிய 15 தெருநாய்கள்

ஐதராபாத்தில் பெண் ஒருவரை ஒரே நேரத்தில் 15 தெருநாய்கள் தாக்கின. அந்த பெண் நாய்களுடன் சுமார் அரை மணி நேரம் போராடி தன் உயிரை காப்பாற்றிக் கொண்டார்.

ஐதராபாத்தில். வீட்டின் அருகே உள்ள மைதானத்திற்கு வாக்கிங் செல்ல  ஸ்கூட்டியில்  சென்ற பெண் வாகனத்தை நிறுத்திவிட்டு தனியாக நடந்து சென்றபோது. திடீரென 15 நாய்கள் ஒரே நேரத்தில் தாக்கின.

சுற்றியிருந்த நாய்களைப் பார்த்து நடுங்கி, சூழ்ந்திருந்த நாய்களை இரு கைகளாலும் தள்ளிவிட்டு, தாக்குதலில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயன்றார். உதவிக்காக அலறியடித்த அவர், நாய்களுடன் சுமார் அரை மணி நேரம் போராடினார்

கடைசியாக அந்த பகுதிக்கு ஒரு சிறுவன் ஸ்கூட்டியில் வர, அதே நேரத்தில் மற்றொரு காரும் வந்ததையடுத்து நாய்கள் அங்கிருந்து ஓடி விட்டன. நாய்களுடனான சண்டையில், இறுதியில் பெண் வெற்றி பெற்றார். சிறிய காயங்களைத் தவிர, பெரிய காயம் ஏற்படவில்லை.

அவரை நாய்கள் தாக்கும் சிசி கேமரா வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோக்களை பார்த்த நெட்டிசன்கள். நாய் தாக்குதலை எதிர்கொண்ட அவரது தைரியத்தை பாராட்டி வருகின்றனர்.

இந்த சம்பவத்திற்கு பதிலளித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில், தன் மனைவியை நாய்கள் தாக்கினாலும், இதுபோன்ற சம்பவங்கள் அனைவருக்கும் நடக்கலாம் . தெருநாய்களுக்கு உணவளிப்பவர்கள். நாய்களை நேசிப்பவராக இருந்தால், ஒன்று அல்லது இரண்டு நாய்களை வீட்டிற்கு அழைத்துச் சென்று உணவளிக்க வேண்டும். பெரியவராக இருந்ததால் நாய்களின் தாக்குதலை தைரியமாக மனைவி எதிர்கொண்டதால்  உயிர் பிழைத்தார். அதே இடத்தில் வேறு குழந்தைகள் இருந்திருந்தால்.. நிலைமை என்னவாகியிருக்கும்? எனவே மனிதாபிமானத்துடன் சிந்தித்து தெருநாய்கள் விஷயத்தில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எத்தனை தெருநாய் தாக்குதல்கள் நடந்தாலும் இதை பொருட்படுத்தாத அதிகாரிகள்! இந்த சம்பவத்தை பார்த்த பின்பாவது சோம்பேறித்தனத்தை நிறுத்துங்கள் என நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top