Close
நவம்பர் 21, 2024 6:00 மணி

இந்தியா பிடிக்கவில்லை என்றால் வெளியேறுங்கள்: விக்கிபீடியாவிற்கு டில்லி ஐகோர்ட் எச்சரிக்கை

இந்தியா உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், விக்கிபீடியா நிறுவனம் இங்கிருந்து வெளியேறலாம் என டில்லி ஐகோர்ட் எச்சரித்துள்ளது.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட திருத்தங்கள் பற்றிய தகவல்களைத் தடுத்து நிறுத்தியதற்காக, பிரபலமான மற்றும் இலவச ஆன்லைன் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவிற்கு டில்லி ஐகோர்ட் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது .

இந்தியச் சட்டங்களுக்கு இணங்காததற்கு எதிராக விக்கிப்பீடியாவை எச்சரித்த நீதிமன்றம், “உங்களுக்கு இந்தியா பிடிக்கவில்லை என்றால், தயவுசெய்து இந்தியாவில் வேலை செய்யாதீர்கள். உங்கள் தளத்தை முடக்குமாறு அரசிடம் கேட்போம்” என்று அறிவித்தது.

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரை தலைமையிடமாக கொண்டு விக்கிபீடியா இணையதளம் செயல்பட்டு வருகிறது. ஆன்லைன் கலைக்களஞ்சியமான இந்த தளத்தில் பதிவு செய்யப்பட்ட எவரும் ஒரு கட்டுரையை உருவாக்கலாம். திருத்தலாம்.

இந்த தளத்தில், ஏஎன்ஐ செய்தி நிறுவனம் குறித்த தகவலை அவதூறாக சித்தரித்து 3 முறை திருத்தி உள்ளனர். இதனை எதிர்த்து ஏஎன்ஐ சார்பில் டில்லி உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. 2 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக்கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நவீன் சாவ்லா, அந்த பக்கத்தை திருத்தியவர்களின் விவரங்களை சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டு இருந்தார். ஆனால், அந்நிறுவனம் இந்தியாவில் செயல்படாததால் தகவல்களை தருவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று நபர்களும் எடிட்டர்கள் அல்ல என்று விக்கிபீடியா கூறவில்லை என்று ஏஎன்ஐ கூறியதை அடுத்து இது நடந்தது.

இதனால் கோபமடைந்த நீதிபதி கூறியதாவது: விக்கிபீடியா இந்தியாவில் ஒரு நிறுவனமாக இல்லை என்பது கேள்வி அல்ல. இதற்கு முன்பும் இதேபோன்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளீர்கள். உங்கள் வணிகத்தை இங்கு நிறுத்தும்படி அரசுக்கு உத்தரவிடுவோம். இணையதளத்தை தடை செய்யும்படி உத்தரவிட முடியும். உங்களுக்கு இந்தியா பிடிக்கவில்லை என்றால், இங்கிருந்து பணியாற்றாதீர்கள். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top