Close
ஏப்ரல் 4, 2025 11:41 காலை

சபரிமலையில் பக்தர்களை நேரடியாக சன்னிதிக்கு அனுப்ப தேவசம் போர்டு ஆலோசனை

சபரிமலை ஐயப்பன் கோயில்

சபரிமலையில் 18 படி ஏறி வரும் பக்தர்களை நேரடியாக சன்னிதிக்கு அனுப்பி கூடுதல் தரிசன வசதி செய்வதற்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஆலோசித்து வருகிறது.

சபரிமலையில் தற்போது 18 படி ஏறி வரும் பக்தர்கள் இடது பக்கமாக திரும்பி மேம்பாலம் ஏறி நீண்ட நேரம் காத்திருந்து சுற்றி வந்து மூலவரை தரிசனம் செய்ய வேண்டும். அதிலும் நேரடியாக பார்க்காமல் வலதுபுறம் திரும்பி, சில வினாடிகள் மட்டுமே தரிசிக்க முடியும். கூட்ட நேரத்தில் போலீசார் பக்தர்களை தள்ளி விடும்போது பலருக்கு தரிசனம் கிடைக்காத சூழ்நிலையும் இருக்கிறது.

இதை தவிர்த்து மாற்று வழி ஏற்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனையடுத்து 18 படியேறி வரும் பக்தர்களை, கொடி மரத்தின் பக்கவாட்டில் நேரடியாக கிழக்கு வாசல் வழியாக உள்ளே அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. கிழக்கு வாசலில் நுழைந்ததுமே மூலவர் தெரிவார் என்பதால் பக்தர்கள் கூடுதல் நேரம் மூலவரை தரிசிக்க முடியும்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: தரிசனம் முடிந்த பக்தர்கள் சன்னிதியின் பின்புறம் வழியாக உள்ள பாலத்தில் மாளிகைபுறம் கோவிலுக்கு சென்று தரிசனம் முடித்து, ‘பெய்லி’ பாலம் வழியாக பம்பைக்கு திருப்பி அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் இந்த மாற்றத்தை அமல்படுத்தி பார்த்த பின், கேரள உயர் நீதிமன்றம், அரசு, மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்

சபரிமலை  தந்திரி கண்டரரு ராஜீவரரு பக்தர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் கூறியதாவது: விரதத்தில் எவ்வளவு கவனம் செலுத்துகிறார்களோ அது பயணத்திலும் இருக்க வேண்டும். இருமுடி கட்டில் பாலிதீன் பைகள் இருக்கக்கூடாது. சபரிமலை என்பது 18 மலைகளால் சூழப்பட்டது. இந்த மலைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டியது பக்தரின் கடமை. தேவையில்லாத ஆசாரங்களை சபரிமலையில் செய்ய வேண்டாம். பம்பையில் சோப்பு போட்டு குளிப்பதும், ஆடைகளையும் விட்டுச் செல்வதும் மிகவும் தவறு. இப்படி ஒரு ஆசாரம் இங்கு கிடையாது. இதை பக்தர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இது அவர்கள் ஐயப்பனுக்கு செய்யும் சேவையாக அமையும்.

இந்த சீசனில் நடை திறக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், பக்தர்களுக்கு நல்ல தரிசனம் கிடைக்கிறது. இதற்காக கேரள அரசும் தேவசம் போர்டும் நல்ல முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top