Close
டிசம்பர் 12, 2024 7:45 காலை

கேஜ்ரிவாலுக்கு அரசு வீடு கிடைக்குமா?

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு, தகுதியின்படி, விரைவில் அரசு குடியிருப்பு ஒதுக்கப்படும் என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் கூறினார்.

டில்லியின் முன்னாள் முதல்வர் கேஜ்ரிவாலுக்கு மத்திய அரசு, அரசு குடியிருப்பு ஒதுக்கி தர வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி கோரி வருகிறது. ஒரு தேசிய கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் அவருக்கு உரிமை உண்டு என்று ஆம் ஆத்மி வலியுறுத்தியது.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, அக்கட்சி சமீபத்தில் அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியது. செப்டம்பரில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த கேஜ்ரிவால், அக்டோபரில் 5 ஆம் தேதி பெரோஸ்ஷா சாலையில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி., அசோக் மிட்டலின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு மாறினார்.

முன்னதாக, டில்லி முதல்வராக இருந்தபோது, வடக்கு டில்லியில் உள்ள சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள பங்களாவில் தங்கியிருந்தார்.

இது குறித்து டில்லியில் அமைச்சர் மனோகர் லால் கட்டார் கூறியதாவது: ஒரு தேசிய கட்சியின் தலைவர் என்ற முறையில், கேஜ்ரிவாலுக்கு 7 வது வகை பங்களாவுக்கு உரிமை உண்டு. இருப்பினும், 7வது பிரிவில்அனைத்து வகை தங்குமிடங்களும் தற்போது நிரம்பி விட்டன. தற்போது, ​​5வது மற்றும் 6வது வகை பங்களாக்கள் மட்டுமே உள்ளன, தற்போது 7வது வகை பங்களாக்கள் இல்லை. அது கிடைத்தவுடன் கேஜ்ரிவாலுக்கு விரைவில் அரசு குடியிருப்பு ஒதுக்கப்படும் என்று கூறினார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top