Close
டிசம்பர் 12, 2024 6:29 மணி

ரயில்வேத்துறையின் செயல்பாடுகளை பாராட்டிய கனிமொழி

லோக்சபாவில் ரயில்வேத்துறையின் செயல்பாடுகளை தி.மு.க., எம்.பி., கனிமொழி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பாராட்டினர்.

ரயில்வே வாரியம் சுதந்திரமாக செயல்படும் விதமான சட்டதிருத்த மசோதா, லோக்சபாவில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதத்தின் போது, மஹாராஷ்டிராவைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி., சுப்ரியா சூலே, ரயில்வே துறைக்கு பாராட்டு தெரிவித்து  பேசியதாவது:மஹாராஷ்டிராவில் ரயில்வே நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாநிலத்தில் உள்ள ஏராளமான ரயில்நிலையங்களில் சுகாதாரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. டவுன்ட் ரயில் நிறுத்தத்தில் முன்பு 80 ரயில்கள் நின்று செல்லும். தற்போது, 40 ரயில்கள் தான் நிற்கின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் பொருளாதாரம் பாதிக்கிறது. இதற்கு மாற்று வழியை கண்டறிந்து தீர்வு காண வேண்டும், எனக் கேட்டுக் கொண்டார்.

அவரைத் தொடர்ந்து தி.மு.க., எம்.பி., கனிமொழியும்  ‘ரயில் நிலையங்கள் மட்டுமல்லாமல், ரயில்களும் சுகாதாரமாக இருக்கின்றன,’ என்று மத்திய அரசை பாராட்டினார்.

எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்.பி.,க்களின் இந்த பாராட்டுக்கு எக்ஸ் தளத்தில் பதிலளித்துள்ள ரயில்வே வாரியம்,’ இதுபோன்ற வார்த்தைகள் மேலும் சிறப்பாக செயல்படுவதற்கான உந்துதலை கொடுக்கும்,’ எனக் குறிப்பிட்டுள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top