ஹரியானா மகளிர் ஆணைய துணைத் தலைவர் சோனியா அகர்வால் மற்றும் அவரது ஓட்டுனர் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹரியானா மகளிர் ஆணைய துணைத் தலைவர் சோனியா அகர்வால் மீதான லஞ்சப் புகார் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தனது கணவர் மீது மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார். இந்த விவகாரம் கணவன்-மனைவி இடையே தகராறு காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. நிலுவையில் உள்ள இந்த புகாரை தீர்ப்பதற்கு சோனியா அகர்வால் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
லஞ்சம் கேட்டது குறித்து புகார்தாரர் ஹரியானா ஊழல் தடுப்புப் பிரிவுக்கு (ஏசிபி) தகவல் தெரிவித்தார்.
ஹரியானா மகளிர் ஆணைய துணைத் தலைவர் சோனியா அகர்வால் மற்றும் அவரது ஓட்டுநர் குல்பீர் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக கைது செய்தனர்.
முதற்கட்ட தகவலின்படி, ஒரு வழக்கில் சலுகை வழங்குவதற்காக சோனியா அகர்வால் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து புகார் அளித்தவர், லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் அளித்ததை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஓட்டுனர் குல்பீர், லஞ்சப் பணத்தை பெற்று சோனியா அகர்வாலிடம் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இருவரிடமும் விசாரணை நடந்து வருகிறது. இதற்கு முன்பும் சோனியா அகர்வால் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டாரா இல்லையா என்பது குறித்து ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. அவரது அலுவலகம் தொடர்பான மற்ற கோப்புகள் மற்றும் விஷயங்களும் ஆய்வு செய்யப்படும்.