Close
டிசம்பர் 15, 2024 5:57 மணி

பெங்களூரு பொறியாளர் தற்கொலை: மனைவி, மாமியார் உள்பட 3 பேர் கைது

உ.பியை  சேர்ந்த அதுல் சுபாஷ் என்பவர் தன் மனைவி மற்றும் அவரின் குடும்பத்தினர் துன்புறுத்துவதாக கூறி 24 பக்கக் கடிதத்தை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

பெங்களூருவில் பொறியாளர் அதுல் சுபாஷின் தற்கொலை வழக்கில் அவரது மனைவி நிகிதா, நிகிதாவின் தாய் மற்றும் அவரது சகோதரர் ஆகியோரையும் காவல்துறை கைது செய்துள்ளது.

பெங்களூருவை சேர்ந்த ஐடி ஊழியர் அதுல் சுபாஷ் தனது தற்கொலை கடிதத்தில், மனைவி, மனைவியின் குடும்பத்தினர் தொல்லையாலேயே, தான் தற்கொலை செய்து கொள்வதாக அதுல் எழுதிய கடிதம் தற்போது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதுல் சுபாஷ் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்தியாவில் ஆண்கள் மீதான சட்டப்பூர்வ படுகொலை நடைபெறுகிறது” என்று குறிப்பிட்டு  24 பக்க தற்கொலை கடிதத்தையும் வெளியிட்டு, தற்கொலை செய்துகொண்டார். 24 பக்க தற்கொலைக் குறிப்பை எழுதி வைத்துவிட்டு, 90 நிமிட வீடியோவையும் பதிவு செய்துவைத்து அவர் தற்கொலை செய்துள்ளார். அந்த பதிவில், தன் மீதும் தனது குடும்பத்தினர் மீதும் தனது மனைவி நிகிதா சிங்கானியா மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு பொய் வழக்குகளைப் போட்டுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார். பிரிந்து சென்ற மனைவி மற்றும் மகனுக்கு பராமரிப்பு தொகையாக மாதம் ரூ.2 லட்சம் வழங்கவேண்டும் என்று தன்னை அவர்கள் வற்புறுத்துவதாகத் தெரிவித்திருந்தார்.

தற்கொலைக்கான காரணத்தை குறிப்பிட்ட கடிதத்தில் தன்னை மிரட்டி தன்னுடைய மனைவி மற்றும் அவரின் குடும்பம் பணம் பறிக்க முயன்றதாகவும் அதற்காக தன்னுடைய குழந்தையை ஆயுதமாகப் பயன்படுத்தியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

சமீபத்தில் குடும்ப நல நீதிமன்றம் அதுல் சுபாஷுக்கு எதிராக தீர்ப்பளித்திருக்கிறது. அதனால் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்திருந்தனர். அதுமட்டுமல்ல இதுபோன்ற வழக்குகளில் ஆண்களுக்கு எதிராக பெண்கள் சார்பாக இருப்பதாகக் கூறி குற்றம் சாட்டி நீதி அமைப்பை விமர்சித்திருந்தார் அதுல் சுபாஷ்.

அவர் இறப்பதற்கு முன்பு சில கோப்புகளை பதிவேற்றிய கூகுள் டிரைவ் லிங்கை பகிர்ந்திருந்தார். அந்த கூகுள் டிரைவில் இருந்த கோப்புகள் தற்போது மர்மான முறையில் காணாமல் போயிருக்கின்றன. அந்த கூகுள் டிரைவில் 24 பக்க தற்கொலை கடிதமும் நீதி அமைப்பை விமர்சித்திருந்த `மை லார்ட்’ என்ற கடிதமும் இருந்திருக்கிறது. அது தற்போது காணாமல் போயிருக்கிறது.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த அதுல் சுபாஷின் மனைவி நிகிதா சிங்கானியா, அவரது தாயார் நிஷா மற்றும் சகோதரர் அனுராக் ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டனர். அரியானாவின் குருகிராமில் இருந்து நிகிதா கைது செய்யப்பட்டதாகவும், உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத்தில் இருந்து அவரது தாய் நிஷா மற்றும் சகோதரர் அனுராக் ஆகியோர் கைது செய்யப்பட்டதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top