காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடுமையான குளிர் அலை வீசியதால் திங்கள்கிழமை தால் ஏரியின் மேற்பரப்பு உறைந்தது,
ஸ்ரீநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 3.7 டிகிரி, அதிகபட்ச வெப்பநிலை 7 டிகிரி பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“வானிலை மிகவும் குளிராக மாறிவிட்டது… எங்கள் கைகள் உறைய ஆரம்பித்துவிட்டன, தால் ஏரி உறைந்துவிட்டது…” என்று உள்ளூர்வாசி ஒருவர் கூறினார். கடுமையான குளிர்காலத்தில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள மக்கள் நெருப்பைச் சுற்றி அமர்ந்திருந்தனர்.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் டிசம்பர் 24 முதல் கடுமையான குளிர் அலை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
முன்னதாக டிச 22 ஆம் தேதி, ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, மாநிலத்தில் கடுமையான குளிர் நிலவி வருவதால், மின்சாரம் மற்றும் பிற துறைகளின் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக ஜம்முவில் திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்தார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலவும் கடும் குளிர் மற்றும் அதன் விளைவாக தண்ணீர் மற்றும் மின்சாரம் வழங்குவதில் உள்ள சிரமங்களை முன்னிட்டு, மின் துறையின் செயல்பாட்டை தனிப்பட்ட முறையில் கண்காணிக்க ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் வரவிருக்கும் நிகழ்ச்சிகளை அடுத்த வாரத்திற்கு ரத்து செய்ய முடிவு செய்துள்ளேன். என்று பதிவிட்டுள்ளார்.
ஜம்முவிற்கு தனது பயணத்தை ரத்து செய்த பிறகு, நிகழ்ச்சிகள் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மற்றும் அமைப்புகளுக்கு நிவாரணம் வழங்குவதாக அவர் உறுதியளித்தார்.