Close
டிசம்பர் 26, 2024 2:40 காலை

அயோத்தி ராமர் கோவில் முதலாம் ஆண்டு கொண்டாட்டம்

அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் கும்பாபிஷேகத்தின் முதலாம் ஆண்டு விழா அடுத்த ஆண்டு ஜன 11 ஆம் தேதி நடைபெறும் என்று கோயில் அறக்கட்டளை தலைவர் சம்பத் ராய் தெரிவித்தார்.

அயோத்தியின் ராமர் கோயிலில் ராம் லல்லா பிரதிஷ்டை விழாவைக் குறிக்கும் வகையில், ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை ஜன 11 முதல் மூன்று நாள் கொண்டாட்டங்களைத் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து அறக்கட்டளை உறுப்பினர் ஒருவர் கூறியதாவது: அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் பிரான் பிரதிஷ்டா விழா இந்த ஆண்டு ஜன 22 அன்று நடந்தது, இது இந்து நாட்காட்டியின் படி “பௌஷ் சுக்ல துவாதசி”. 2025 ஆம் ஆண்டில், இது ஜன 11 அன்று வருகிறது. மூன்று நாள் கொண்டாட்டங்கள் பிரதிஷ்டா துவாதசி என்று அழைக்கப்படும்.

மூன்று நாள் கொண்டாட்டங்களுக்காக, பிரான் பிரதிஷ்டை விழாவிற்கு அழைக்கப்படாத அல்லது வர முடியாத துறவிகள் அனைவருக்கும் சிறப்பு அழைப்பிதழ்களை அனுப்ப முடிவு செய்துள்ளோம். பெயர்களை தேர்வு செய்யும் பணி துவங்கியுள்ளது..

இந்த நிகழ்வுகள் மற்றும் கொண்டாட்டங்கள் கோவில் வளாகத்தில் ஐந்து இடங்களில் நடைபெறும். இவைகளில் யக்ஞ மண்டப நிகழ்ச்சிகள் அடங்கும், அங்கு அக்கினி கடவுளுக்கு ஆஹுதி வழங்கப்படும். பின்னர், ஸ்ரீ ராம் மந்திர ஜப் யாகமும் இரண்டு அமர்வுகளில் நிகழ்த்தப்படும், அதே நேரத்தில் ஆறு லட்சம் மந்திரங்கள் மூன்று நாட்களில் உச்சரிக்கப்படும். பின்னர், ராம் ரக்ஷா ஸ்தோத்திரம், அனுமன் சாலிசா, புருஷ் சுக்தா, ஸ்ரீ சுக்தா, ஆதித்ய ஹிருத்ய ஸ்தோத்ரம், அதர்வஷிர்ஷா பாராயணம் நடைபெறும்” என்று தெரிவித்தார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top