Close
ஜனவரி 15, 2025 3:06 மணி

இந்தியாவின் அதிவேக ரயில் இஞ்சின்: வியப்பில் உலக நாடுகள்

இந்திய ரயில்வே உருவாக்கிய ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில் இன்ஜின் உலகிலேயே அதிக குதிரைத்திறன் கொண்டது என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

வேறு எந்த நாட்டிலும் இல்லாத ரயில்வே தொழில்நுட்பத்தை இந்தியா உருவாக்கியுள்ளது. இந்திய ரயில்வே உருவாக்கியுள்ள ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில் இன்ஜின்தான் உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த என்ஜின் என ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

500 முதல் 600 எச்.பி திறன் கொண்ட இத்தகைய ரயில் என்ஜின்களை உலகளவில் நான்கு நாடுகள் மட்டுமே உற்பத்தி செய்கின்றன. இந்நிலையில் இந்தியா இரட்டிப்பு திறன் கொண்ட இஞ்சின்களை உருவாக்கியுள்ளது. இந்திய ரயில்வே ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில் இன்ஜினை உருவாக்கியுள்ளது. இது உலகின் மிக சக்திவாய்ந்த இன்ஜினாகும் .

இந்திய இரயில்வேயின் உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட இஞ்சின் 1,200 எச்பி திறனை உற்பத்தி செய்கிறது, இது இன்றுவரை இந்த வகையிலேயே அதிகபட்சமாக உள்ளது.

இன்ஜின் குறித்து  ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: இந்தியா குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப மைல்கற்களை எட்டியுள்ளது. ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் இஞ்சினை இவ்வளவு பெரிய அளவில் உருவாக்க முடியும், இது உலகில் இதே போன்ற இஞ்சின் இல்லை, அது இந்த தொழில்நுட்பத்தை டிரக்குகள், பேருந்துகள், இழுவை படகுகள் மற்றும் பிற வாகனங்களில் பயன்படுத்துவதற்கான திறனைக் காட்டுகிறது.

2023-24 நிதியாண்டில், 35 ஹைட்ரஜன் எரிபொருள் செல்-இயங்கும் ரயில்களை மேம்படுத்த ரயில்வே அமைச்சகம் 2,800 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

இன்ஜின் கட்டி முடிக்கப்பட்டு, தற்போது, ​​சிஸ்டம் ஒருங்கிணைக்கும் பணி நடந்து வருகிறது. முதல் ஹைட்ரஜன் ரயில் வடக்கு ரயில்வேயின் டி’ல்லி பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 89 கிமீ நீளமுள்ள ஜிந்த்-சோனிபட் பிரிவில் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தகைய தொழில்நுட்ப முன்னேற்றம் தேசத்திற்கு நம்பிக்கையை அளிக்கிறது என்றும், தொழில்நுட்ப தன்னிறைவை அடைவதில் இந்தியா நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது என்று கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top