Close
ஜனவரி 23, 2025 1:13 காலை

வாகனங்களுக்கு மாத அல்லது வருட பாஸ்: நிதின் கட்கரி

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

தேசிய நெடுஞ்சாலைகளில் தனியார் வாகனங்களுக்கு மாதாந்திர மற்றும் ஆண்டு பாஸ் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

நெரிசலைக் குறைக்கவும், பயணித்த சரியான தூரத்திற்கு கட்டணம் வசூலிக்கவும் ஜிஎன்எஸ்எஸ் அடிப்படையிலான கட்டண வசூல் முறையின் திட்டங்களை அவர் அறிவித்தார்.

இது குறித்து நிதின் கட்கரி கூறியதாவது: தேசிய நெடுஞ்சாலைகளில் வணிக வாகனங்களில் இருந்து 74 சதவீதம் சுங்கச்சாவடி வருமானம் வருகிறது. தனியார் வாகனங்கள் மொத்த வசூலில் 26 சதவீதம் மட்டுமே பங்களிப்பதால், சுங்கவரி வசூலிக்க மாத மற்றும் வருடாந்திர பாஸ்களை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

தேசிய நெடுஞ்சாலைகளில் தடையற்ற “குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் (ஜிஎன்எஸ்எஸ்) அடிப்படையிலான கட்டண வசூல் முறையை ஃபாஸ்ட்டேக்  உடன் கூடுதல் வசதியாக செயல்படுத்த சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் முடிவு செய்துள்ளது.  ஜிஎன்எஸ்எஸ் அடிப்படையிலான கட்டண வசூல் முறை தற்போதைய சுங்க வசூல் முறையை விட சிறப்பாக இருக்கும்..

கடந்த ஆண்டு ஜூலை மாதம், கர்நாடகாவில் பெங்களூரு-மைசூர் பகுதியிலும், ஹரியானாவில் பானிபட்-ஹிசார் பகுதியிலும் ஜிஎன்எஸ்எஸ் -அடிப்படையிலான பயனர் கட்டண வசூல் முறை தொடர்பாக ஒரு பைலட் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.   போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் , சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் நேரத்தை குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .

நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சரியான தூரத்திற்கு இந்த அமைப்பு பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கும். 2018-19 ஆம் ஆண்டில், சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கான சராசரி காத்திருப்பு நேரம் 8 நிமிடங்கள். 2020-21 மற்றும் 2021-22 ஆம் ஆண்டுகளில் ஃபாஸ்ட்டேக் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், வாகனங்களின் சராசரி காத்திருப்பு நேரம் 47 வினாடிகளாகக் குறைக்கப்பட்டது.

டிரக்குகளின் எடையையும் கேமராக்கள் கண்டறியும். எடை அதிகமாக இருந்தால், அங்கேயே அபராதம் விதிக்கப்படும். தடையற்ற சுங்கச்சாவடிகளுக்கான டெண்டர்கள் தடையற்ற சுங்கச்சாவடி திட்டத்திற்கான டெண்டர் அடுத்த 15-20 நாட்களில் வெளியிடப்படும் என்று கூறினார்,

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top