Close
ஏப்ரல் 3, 2025 12:36 மணி

கன்னித்தன்மையை பரிசோதனை செய்யச் சொல்லி கேட்பது அரசியலமைப்பிற்கு எதிரானது: சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம்

கோர்ட் உத்தரவு -கோப்பு படம்

மனைவியின் கன்னித்தன்மையை பரிசோதனை செய்யச் சொல்லி கேட்பது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று சத்தீஸ்கர் ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு தம்பதிக்கு இந்து முறைப்படி திருமணம் நடந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் கோர்பா மாவட்டத்தில் வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் அந்தப் பெண், தன் கணவருக்கு ஆண்மை இல்லை என்றும், தன் செலவுகளுக்காக இடைக்காலமாக மாதம்தோறும் ரூ. 20,000 வழங்க கணவருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோர்ட்டில் வழக்குத் தொடுத்தார்.

கணவர் தாக்கல் செய்த மனுவில், மனைவி அவரது உறவினருடன் திருமணத்திற்கு மீறிய உறவு வைத்துள்ளதாகவும், ஆகையால் மனைவியின் கன்னித்தன்மையை பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதை கோர்ட் தள்ளுபடி செய்ததால், அவர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த சத்தீஸ்கர் ஐகோர்ட், “ஒரு பெண்ணின் கன்னித்தன்மையை பரிசோதிக்க உத்தரவிடுவது அரசியலமைப்பிற்கு எதிரானது என்றும், இது அந்தப் பெண்ணின் மாண்பைக் குறைப்பதாகும்” என்று உத்தரவிட்டுள்ளது.

மேலும் அரசியலமைப்பு பிரிவு 21-ன் படி, இது அடைப்படை உரிமையை மீறுவதாகும் என்றும், ஒரு பெண் மாண்புடன் வாழ வேண்டும், கன்னித்தன்மை பரிசோதனை நடத்துவது அதை மீறுதலாகும் என்றும் கூறி குடும்ப நல நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top