உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் இருந்தபோதிலும் இந்தியாவின் பொருளாதாரம் நிலைத்தன்மை மற்றும் மீள்தன்மைக்கான அறிகுறிகளைக் காட்டுகிறது என்று எகனாமி வாட்ச் அறிக்கை தெரிவிக்கிறது.
வர்த்தக பதட்டங்கள் மற்றும் மெதுவான வளர்ச்சி காரணமாக உலகப் பொருளாதாரம் சவால்களை எதிர்கொண்டாலும், பணவீக்கக் கட்டுப்பாடு, நிதி செயல்திறன் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைகளில் ஊக்கமளிக்கும் போக்குகளை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: பிப்ரவரி மற்றும் மார்ச் 2025க்கான கிடைக்கக்கூடிய தகவல்கள், இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை பராமரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் வலுவாகத் தோன்றும் சூழ்நிலையை சுட்டிக்காட்டுகிறது. உற்பத்தி மற்றும் சேவைகள் செயல்பாடு இரண்டின் வலுவான செயல்திறனை பிரதிபலிக்கிறது. இந்தியாவிற்கு மிகவும் சாதகமான முன்னேற்றங்களில் ஒன்று பணவீக்கத்தில் கூர்மையான சரிவு ஆகும். சில்லறை பணவீக்கம், மார்ச் 2025ல் 3.3 சதவீதமாகக் குறைந்தது – இது 67 மாதங்களில் இல்லாத மிகக் குறைந்த அளவாகும்.
முக்கியமாக காய்கறி விலைகள் வீழ்ச்சியடைந்ததாலும், உணவுப் பணவீக்கத்தைக் குறைத்ததாலும் ஏற்பட்டது. உணவு மற்றும் எரிபொருளைத் தவிர்த்து முக்கிய பணவீக்கமும் மார்ச் மாதத்தில் 4.1 சதவீதமாக சற்று மிதமானது.
மார்ச் மாதத்தில் மொத்த விலை குறியீட்டு எண் பணவீக்கமும் 2.0 சதவீதமாகக் குறைந்தது, இதற்கு உணவு மற்றும் கச்சா எண்ணெய் விலைகள் குறைந்து வருவதே காரணம். இந்தப் போக்குகள் பணவீக்க அழுத்தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், வரும் மாதங்களில் 4 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்-பிப் நிதியாண்டு 25ம் ஆண்டில் மத்திய அரசின் மொத்த வரி வருவாய் 10.9 சதவீதம் வளர்ந்துள்ளது. இருப்பினும், நீண்ட கால வளர்ச்சிக்கு அவசியமான மூலதனச் செலவு, அதே காலகட்டத்தில் 0.8 சதவீதம் மட்டுமே வளர்ந்தது.
இருப்பினும், பிப்ரவரி 2025ல் மூலதனச் செலவினத்தில் 35.4 சதவீத கூர்மையான சரிவு கவலைகளை எழுப்பியது. திருத்தப்பட்ட இலக்கை அடைய, மார்ச் மாதத்தில் மூலதனச் செலவு 44 சதவீதத்திற்கும் அதிகமாக வளர வேண்டும் என்று அறிக்கை குறிப்பிட்டது.