ராம்பனில் உள்ள பாக்லிஹார் நீர்மின் திட்டத்தில் இரண்டு கதவுகளையும், ரியாசியில் உள்ள சலால் அணையில் மூன்று கதவுகளையும் மத்திய அரசு திறந்தது.
செனாப் நதியின் நீர்மட்டம் கடுமையாகக் குறைந்த சில நாட்களுக்குப் பிறகு நதியின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்த அரசு முடிவெடுத்தது. இதன் விளைவாக, சமீப காலங்களில் முதல் முறையாக சில கீழ்நிலைப் பகுதிகளில் ஆற்றுப் படுகை நடந்து செல்லக்கூடியதாக மாறியது.
இந்நிலையில் இப்பகுதியில் கனமழையால் ஏற்படும் நீர் மட்ட உயர்வு மற்றும் அணை அழுத்தத்தை நிர்வகிக்க அணை நீரை திறந்து விர முடிவு செய்யப்பட்டது.
பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் சூழலில், செனாப் நதியின் ஓட்டத்தை ஒழுங்குபடுத்துவது, இந்தியாவின் நீர் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் 22ம் தேதி பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பல சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பொதுமக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்ததைத் தொடர்ந்து, நதியின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டது.
சர்வதேச நீர்வழித் தடைச் சட்டத்தின் கீழ், செனாப் போன்ற மேற்கு நோக்கிய ஆறுகளின் ஓட்டத்தில் எந்தவொரு குறிப்பிடத்தக்க தலையீடுகளையும் செய்வதற்கு முன்பு பாகிஸ்தானுக்குத் தெரிவிக்க இந்தியா கடமைப்பட்டுள்ளது. இருப்பினும், ஒப்பந்தம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப நதி நீரை நிர்வகிப்பதில் இந்தியா ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டுள்ளது.