ஆபரேஷன் சிந்தூர்க்குப் பிறகு, ஒவ்வொரு பயங்கரவாதத் தாக்குதலுக்கும் பாக் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை இந்தியா தெளிவுபடுத்தியது. மோடியின் நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை, சூடான சிந்தூர்தான் ஓடுகிறது என்று பிரதமர் மோடி கூறினார்
ராஜஸ்தானின் பிகானேரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தான் ஒன்றை மறந்துவிட்டது: இப்போது இந்தியத் தாயின் ஊழியரான மோடி, தலை நிமிர்ந்து நிற்கிறார். மோடியின் மனம் குளிர்ச்சியாக இருக்கிறது; ஆனால் மோடியின் இரத்தம் சூடாக இருக்கிறது. இப்போது மோடியின் நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை, ஆனால் சூடான சிந்தூர்தான் ஓடுகிறது.
இப்போது பாக்.குடன் வர்த்தகமோ பேச்சுவார்த்தையோ இருக்காது. பேச்சு நடந்தால், அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே இருக்கும். இன்று, உங்கள் ஆசிகளாலும், நாட்டின் ராணுவத்தின் வீரத்தாலும், நாம் அனைவரும் அந்த உறுதிமொழியை நிறைவேற்றியுள்ளோம்.
நமது அரசாங்கம் மூன்று படைகளுக்கும் சுதந்திரம் கொடுத்தது. மூன்று படைகளும் சேர்ந்து, பாகிஸ்தான் மண்டியிட வேண்டிய அளவுக்கு ஒரு சக்ரவியூகத்தை உருவாக்கியது. இன்று, ராஜஸ்தான் நிலத்திலிருந்து, சிந்தூரைத் துடைக்கப் புறப்பட்டவர்கள் தூசியாகிவிட்டார்கள் என்பதை நான் நாட்டு மக்களுக்கு பணிவுடன் சொல்ல விரும்புகிறேன்.
இந்தியாவின் இரத்தத்தைச் சிந்தியவர்களின் ஒவ்வொரு துளிக்கும் கணக்கு தீர்க்கப்பட்டுள்ளது. இந்தியா அமைதியாக இருக்கும் என்று நினைத்தவர்கள் இன்று தங்கள் வீடுகளில் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். தங்கள் ஆயுதங்களைப் பற்றி பெருமைப்பட்டவர்கள் இடிபாடுகளின் கீழ் புதைக்கப்பட்டுள்ளனர்.
இந்திய முப்படைகளும் இணைந்து நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பாகிஸ்தானை மண்டியிடச் செய்தன. சிந்தூர் (குங்குமம்) வெடிமருந்தாக மாறும் போது என்ன நடக்கும் என்பதை உலகமும், நாட்டின் எதிரிகளும் இப்போது நேரடியாகப் பார்த்துள்ளனர் என்று கூறினார்.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் கைவிடப்பட்டதைக் குறிப்பிட்டு, பிரதமர் மோடி, “ஒவ்வொரு பயங்கரவாதத் தாக்குதலுக்கும் பாக் பெரும் விலையை கொடுக்க வேண்டும் என்பதை இந்தியா தெளிவாகக் கூறியுள்ளது. இந்த விலையை பாக் இராணுவமும் அதன் பொருளாதாரமும் செலுத்தும். இந்தியாவின் பங்கிலிருந்து பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது.
இந்தியர்களின் இரத்தத்துடன் விளையாடும் நாட்கள் முடிந்துவிட்டன – அதற்கு இப்போது அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். இதுதான் கொள்கை; இதுதான் பயங்கரவாதத்தை நசுக்கும் முறை. இதுதான் இந்தியா, புதிய இந்தியா என்று கூறினார்.