Close
டிசம்பர் 3, 2024 5:30 மணி

புதுக்கோட்டையில் தமிழ்க் கல்லூரி: புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் கோரிக்கை

புதுக்கோட்டை

புதுக்கோட்டை தமிழ்ச்சங்க ஆலோசனைக்கூட்டத்தில் பேசுகிறார், சங்கத்தலைவர் கவிஞர்தங்கம் மூர்த்தி

புதுக்கோட்டையில் தமிழ்க்கல்லூரி அமைக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென புதுக்கோட்டைத்தமிழ்ச்சங்கம்  வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்க தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமையில், புதுக்கோட்டை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அச்சங்கத்தின் முதல் நிர்வாகக் குழுக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்ட பிற தீர்மானங்கள்: புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் தொடக்க விழாவில் பங்கேற்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கு நன்றி தெரிவிப்பது.தொடக்க விழா நடத்த இடம் வழங்கி உதவிய புரவலர் அருண் சின்னப்பா அவர்களுக்கு நன்றி தெரிவிப்பது.

மாதம் ஒரு கூட்டத்தை இலக்கிய நிகழ்வாக நடத்துவ தென்றும், ஆண்டு தோறும் ஒரு மாபெரும் இலக்கியத் திருவிழா நடத்துவது .

வாழ்நாள் முழுவதும் தமிழுக்குப் பாடுபட்டு வரும் அறிஞர்களுக்கு “வாழ்நாள் தமிழ்த் தொண்டர் விருது“ வழங்குவது. புதுக்கோட்டையில் தமிழ்க் கல்லூரி ஒன்றை தொடங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்,. தமிழ்ச்ச ங்கத்தின் முதல் விழாவாக பொங்கல் திருநாளை முன்னிட்டு “தமிழர் மரபுவிழா“ கொண்டாடுவது என்பன உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதுக்கோட்டை
புதுக்கோட்டைத் தமிழ்ச்சங்கக்கூட்டம்

இக்கூட்டத்தில் சங்கத்தின் ஆலோசகர் டாக்டர் ஆர். ராஜ்குமார், துணைத்தலைவர் கவி.முருகபாரதி, சட்ட ஆலோசகர் அரசு சிறப்பு வழக்கறிஞர் செந்தில்குமார், செயற்குழு உறுப்பினர்கள் வெங்கடசுப்ரமணியன்,  பாவேந்தர் காசிநாதன், மகாத்மா ரவிச்சந்திரன், முத்துப்பாண்டியன்.

திருக்களம்பூர் நெ. இராமச்சந்திரன், எழுத்தாளர் ராஜநாராயணன், கவிஞர் புதுகைப்புதல்வன், யோகா பாண்டியன், ஆலங்குடி வெள்ளைச்சாமி, நேசன் மகதி, மாஸ்டர் கார்த்திக்கேயன்,  கவிஞர் பீர்முகமது.

வெங்கடேசன், செல்லத்துரை, சுபாஷினி, கீர்த்திகா, டெய்சிராணி, உஷாநந்தினி, உதயகுமார், வம்பனார் அன்பழகன், சிவநந்தினி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் செயலாளர் மகாசுந்தர் வரவேற்றார். பொருளாளர் கருப்பையா நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top