முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி ஈரோடு தெற்கு மாவட்டத்தில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.
இது தொடர்பாக ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும் அமைச்சருமான சு.முத்துசாமி வெளியிட்ட அறிக்கை:
முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி ஈரோடு தெற்கு மாவட்டத்திற்குள்பட்ட மாநகர பகுதிகள், ஒன்றியங்களில் நந்தா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளது.
அதன்படி. அக்டோபர் 22 -ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வீரப்பன்சத்திரம் பகுதியிலும், 29 -ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை பெரியசேமூர் பகுதியிலும், நவம்பர் 5-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோட்டை பகுதியிலும்,
19.11.2023 சூரம்பட்டி பகுதியிலும், 23.11.2023 ஞாயிற்றுக்கிழமை பெரியார் நகர் பகுதியிலும், 3.12.2023 ஞாயிற்றுக்கிழமை கொல்லம்பாளையம் பகுதியிலும், 10.12.2023 ஞாயிற்றுக் கிழமை கருங்கல்பாளையம் பகுதி என மொத்தம் 8 பகுதிகளில் நடைபெறுகின்றன.
இந்த மருத்துவ முகாம்கள், ஈரோடு மாநகர தி.மு.க செயலாளர் மு.சுப்பிரமணியம் தலைமையிலும், பகுதி கழக செயலாளர்கள் எஸ் .குமாரவடிவேல், வி.சி.நடராஜன், வி.செல்வராஜ், பொ.ராமசந்திரன், வில்லரசம்பட்டி முருகேசன், அக்னி டி.சந்திரசேகர், க.லட்சுமணகுமார், குறிஞ்சி என்.தண்டபாணி ஆகியோர் முன்னிலையிலும்.
17.12.2023 ஞாயிற்றுக்கிழமை கொடுமுடி வடக்கு ஒன்றியத்திலும், 24.12.2023 ஞாயிற்றுக்கிழமை கொடுமுடி மேற்கு ஒன்றியத்திலும், 31.12.2023 ஞாயிற்றுக்கிழமை மொடக்குறிச்சி கிழக்கு ஒன்றியத்திலும்,
7.1.2024 ஞாயிற்றுக்கிழமை மொடக்குறிச்சி மேற்கு ஒன்றியத்திலும், 14.1.2024 ஞாயிற்றுக்கிழமை மொடக்குறிச்சி தெற்கு ஒன்றியத்திலும், 22.1.2024 ஞாயிற்றுக்கிழமை சென்னிமலை ஒன்றியத்திலும்,
28.1.2024 ஞாயிற்றுக்கிழமை ஈரோடு ஒன்றியத்திலும் , 4.2.2024 ஞாயிற்றுக்கிழமை பெருந்துறை தெற்கு ஒன்றியத்திலும், 11.2.2024 ஞாயிற்றுக்கிழமை பெருந்துறை கிழக்கு ஒன்றியத்திலும், 18.2.2024 ஞாயிற்றுக்கிழமை பெருந்துறை வடக்கு ஒன்றியத்திலும்,
25.2.2024 ஞாயிற்றுக்கிழமை ஊத்துக்குளி தெற்கு ஒன்றியத்திலும், 3.3.2024 ஞாயிற்றுக்கிழமை ஊத்துக்குளி வடக்கு ஒன்றியத்திலும், 10.3.2024 ஞாயிற்றுக்கிழமை ஊத்துக்குளி மத்திய ஒன்றியத்திலும்,
ஒன்றிய கழக செயலாளர்கள் மு.சின்னசாமி, ப.நடராஜன் வி.கதிர்வேல், சு.குணசேகரன், ஆர்.விஜயகுமார், பி.செங்கோட்டையன், தோப்பு சதாசிவம், கே.பி.சாமி, சி.பெரியசாமி, பி.சின்னசாமி, பி.பி.ஈஸ்வரமூர்த்தி, எஸ்.சுப்பிரமணியம், வி.ராஜா ஆகிய ஒன்றிய செயலாளர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.
எனவே இந்த நிகழ்ச்சிகளில் அந்தந்த இடங்களில் உள்ள மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வார்டு, ஊர்க்கிளை கழக நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், துணை அமைப்புகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி, கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், தொண்டர்கள், பொது மக்கள் மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், அமைச்சருமான சு.முத்துசாமி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.