Close
செப்டம்பர் 19, 2024 11:09 மணி

ஈரோட்டில் தெற்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் தேர்வுக்கான நேர்காணல்

ஈரோடு

ஈரோட்டில் நடைபெற்ற தெற்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் தேர்வுக்கான நேர்காணல்

ஈரோட்டில் தெற்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் தேர்வுக்கான நேர்காணல்.

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் ஒன்றிய, பேரூர், பகுதி கழக பொறுப்பாளர்கள் நியமனம் குறித்த நேர்காணல் கூட்டம் ஈரோடு மேட்டுக்கடை, தங்கம் மகாலில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு,ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெ.திருவாசகம் தலைமை வகித்தார்.
இதில், ஈரோடு தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய, பேரூர், பகுதி இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் பொறுப்புகள் கோரி ஏற்கெனவே பங்கேற்க தவறிய நபர்கள் தங்களது சுயவிவர குறிப்புகளுடன், ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை, பள்ளி சான்றிதழ்கள் அல்லது பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றுடன் இதுவரை கட்சிக்காக அவர்கள் ஆற்றிய பணிகளின் படங்கள் அடங்கிய தொகுப்புகளுடன் கலந்து கொண்டனர்.

இந்த நேர்காணலில் மாநில இளைஞரணி துணை செயலாளர்கள் கே.இ.பிரகாஷ், எஸ்.ஜோயல், இன்பா ஏ.என். ரகு, நா.இளையராஜா, ப.அப்துல் மாலிக், க.பிரபு, பி.எஸ்.சீனிவாசன், ஜி.பிரதீப் ராஜா, சி.ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஈரோடு
இளைஞரணிக்கு தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள்

இதில், 400-க்கும் மேற்பட்ட இளைஞர் அணியைச் சேர்ந்தவர் கள் பங்கேற்ற இந்த நேர்காணலில் 230 நிர்வாகிகள் உடனடியாக தேர்வு செய்யப்பட்டனர்.கட்சியில் எத்தனை ஆண்டுகளாக இருக்கிறார்கள், அவரது தொழில், தந்தையார் வகிக்கும் தொழில், இல்லந்தோறும் சென்று உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டது குறித்த தகவல் போன்றவை கேள்விகளாக முன்வைக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் மா.சு.ராதாகிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர்கள் செந்தில் குமார், செல்லப்பொன்னி மனோகரன், ஈரோடு மாநகர திமுக செயலாளர் மு.சுப்பிரமணியம், மாநகர துணை செயலாளர் விமல் எ நந்தகுமார்,

பொதுக்குழு உறுப்பினர் பொன்னுசாமி, பத்மநாபன், பகுதி கழக செயலாளர்கள் குமாரவடிவேல், வி.சி.நடராஜன், பொ.ராமச்சந்திரன், முருகேசன், அக்னி சந்துரு, குறிஞ்சி தண்டபாணி, மாநில மாணவரணி துணை செயலாளர் வீரமணி ஜெயக்குமார்,

மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் பாலசுப்பிரமணியம், ரகுராம், விஜயக்குமார், ராகவேந்திரன், சதீஸ்குமார்,நித்தின், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் கே.டி.சேந்தபுகழன், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் பா.ஜாகிர் உசேன், ரமேஷ், சசி, அன்பரசன், நவீன்குமார், பார்த்திபன்,சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாநில துணைச் செயலாளர் கே.ஈ.பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  சேலத்தில் நடைபெற உள்ள இளைஞரணி மாநாட்டில் 5 லட்சத்துக்கு மேற்பட்ட இளைஞர் அணியை சேர்ந்தவர்கள் பங்கேற்பார்கள் என்று ஈரோடு மாவட்டத்திலிருந்து 20,000 மேற்பட்ட இளைஞர் அணியினர் பங்கேற்பார்கள் என்றும் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top