Close
நவம்பர் 22, 2024 7:27 காலை

கொங்கு மண்டலம் என்றும் அதிமுகவின் இரும்புக்கோட்டை: கே.ஏ. செங்கோட்டையன்

ஈரோடு

அதிமுகவின் 52 ஆவது ஆண்டு விழாவை ஒட்டி வெள்ளாங் கோவிலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசுகிறார், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் இருந்து எப்பொழுதும் அதிமுக எஃகு கோட்டையாகவே விளங்கி வருகிறது என்றார் முன்னாள் அமைச்சரும் கோபி எம்எல்ஏ வுமான செங்கோட்டையன்.

ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் அதிமுகவின் 52  ஆவது ஆண்டு விழாவையொட்டி வெள்ளாங்கோவிலில் நடைபெற்ற  பொதுக்கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே. ஏ. செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மேலும் அவர் பேசியதாவது:

தமிழ்நாட்டில் 13 ஆண்டுகள் எம்.ஜி.ஆர். ஆட்சி செய்தார். 5 முறை ஜெயலலிதா முதல்வரானார்.இருவரும் மனிதாபிமான முறையில் ஆட்சி செய்தனர். பிறகு இ.பி.எஸ் தமிழகத்தை  ஆட்சி செய்தார்.

தேர்தல் வாக்குறுதியை தி.மு.க. நிறைவேற்றவில்லை. அ.தி.மு.க. ஆட்சியின் திட்டங்கள் மட்டுமே தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளன. தென் மாவட்டங்கள், வட மாவட்டங்களில் அதிமுக தோல்வி அடைந்தது. தற்போது திமுகவின் மீது உள்ள வெறுப்பால் அங்கு அதிமுகவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் இருந்து எப்பொழுதும் அதிமுக எஃகு கோட்டை யாகவே விளங்கி வருகிறது. தி.மு.க. மீது உள்ள வெறுப்பால் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். அதைத்தொடர்ந்து தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் 234 தொகுதியில் அதிமுக அபார வெற்றி பெறும் என்றார் அவர்.

நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் சத்தியபாமா, பிரினியோ கணேஷ், குறிஞ்சிநாதன், தம்பி சுப்பிரமணியம், அருள், ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top