Close
ஜூலை 8, 2024 11:41 காலை

காய்ச்சல் குறித்து வெளிப்படையாக சொல்வதில் தயக்கம் ஏன் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர்

காய்ச்சல் குறித்து வெளிப்படையாக சொல்வதில் தயக்கம் ஏன் என  முன்னாள் சுகாதாரத்துறை  அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாடு முழுவதும் என்ன காய்ச்சல், என்ன நடவடிக்கை என்பதை வெளிப்படையாக சொல்வதில் அரசுக்கு என்ன தயக்கம் எனக் கேள்வி எழுப்பினார் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.
புதுக்கோட்டையில்  செய்தியாளர்களிடம் மேலும்   அவர் கூறியதாவது: மாநிலம் முழுவதும் தொண்டைவலி, கடுமையான உடல் வலியுடன் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் போதிய படுக்கை வசதிகள் இல்லை.
நூற்றுக்கும் மேற்பட்ட காய்ச்சல் வகைகள் இருப்பதால், அறிகுறிகளுடன் இருப்போரைத் தனிமைப்படுத்தி, பரிசோத னை மேற்கொண்டு வெளிப்படையாக அறிவிப்பதில் என்ன தயக்கம்
கவனத்துடனும் எச்சரிக்கை உணர்வுடனும் அரசு செயல்பட வேண்டும். காய்ச்சல் கணக்குகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு எச்சரிக்கை உணர்வு ஏற்படும் என்றார்  முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top