சென்னிமலையில் வரும் 9-ஆம் தேதி மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன்,
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், மதிமுக பொருளாளர் செந்திலதிபன், தி.க. பொதுச் செயலாளர் துரை சந்திரசேகரன்,
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், கொமதேக மாநில இளைஞரணி செயலாளர் எஸ்.சூரியமூர்த்தி, சிபிஎம் மத்திய குழு உறுப்பினர் சண்முகம், சிபிஐ மாநில துணைச் செயலாளர் என்.பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் தொல்.திருமாவளவனுக்கு வரவேற்பு அளிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சாதிக் தலைமை வகித்தார்.மாநிலத் துணைச் செயலாளர் ரஜினிகாந்த், மாநில செய்தி தொடர்பாளர் பாவலன், மண்டல செயலாளர் சிறுத்தை வள்ளுவன் ஆகியோர் களப்பணி தொடர்பான ஆலோசனைகளை வழங்கினர்.
ஈரோடு வடக்கு, மேற்கு, தெற்கு மாவட்ட செயலாளர்கள் மிசா தங்கவேல், ஈஸ்வரன், ஏ.பி.ஆர்.மூர்த்தி, கமலநாதன், ஓவியர் மின்னல் முன்னிலை வகித்தனர். ஜாபர் அலி வரவேற்றார்.
இந்த பொதுக்கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்பது.
அவருக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பிரம்மாண்டமான வரவேற்பு அளித்தது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் ஈரோடு மேற்கு மாவட்ட சட்டமன்றத் தொகுதி செயலாளர் கே.கே.மூர்த்தி, சண்முகம், ஈரோடு மாவட்ட துணைச்செயலாளர் அக்பர், ஈரோடு மாவட்ட வணிகரணி ரேவேந்திரன், தொகுதி செயலாளர் சண்முகம், பாலகுமார் உள்பட நாமக்கல் சேலம் ஈரோடு கோவை திருப்பூர் மாவட்டங்களின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.