Close
ஏப்ரல் 4, 2025 11:04 காலை

நவ.17 ல் பெருந்துறையில் மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர் கூட்டம்

ஈரோடு

கவுந்தப்பாடியில் நடந்த திமுக ஆலோசனைக்கூட்டத்தில் பேசுகிறார், மாவட்ட செயலர் நல்லசிவம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் ஆணைக்கு இணங்க ஈரோடு மாவட்ட கழக இளைஞரணி செயல்வீரர் கூட்டம்  (பொற்கிழி வழங்கும் விழா ) நவ.17  -ஆம் தேதி
பெருந்துறையில் நடைபெறவுள்ளது.

விழாவில் இளைஞர் நலம் மற்றும் மேம்பாட்டு துறை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று  பொற்கிழி வழங்க உள்ளார்.

இந்த விழா தொடர்பான  ஆலோசனை மற்றும் திமுக செயற்குழு கூட்டம், கவுந்தப்பாடி பாவா மண்டபத்தில் மாவட்ட செயலாளர் நல்லசிவம் தலைமையில் நடந்தது.

இதில், மாநில நிர்வாகிகள் சிந்து ரவிச்சந்திரன், கள்ளிப்பட்டி மணி, அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம், மணிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பொற்கிழி வழங்கும் விழா தொடர்பான தகவல் மூத்த நிர்வாகிகளுக்கு சரியாக சென்றடையவில்லை என குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து திமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில் பெருந்துறையில் இளைஞர் நலம் மற்றும் மேம்பாட்டு துறை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்க உள்ளதார். ஆனால் இது குறித்த தகவல் மூத்த நிர்வாகிகளுக்கு சரியான முறையில் தெரிவிக்கப்படவில்லை இதனால் கட்சிக்காக பாடுபட்ட உண்மையான திமுக நிர்வாகிகளுக்கு பொற்கிழி சென்றடையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top