Close
மே 17, 2024 3:24 காலை

வெண்டையம்பட்டி காளியம்மன் கோவில் தெரு ஆக்கிரமிப்பை அகற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

தஞ்சாவூர்

கோரிக்கை

வெண்டையம்பட்டி காளியம்மன் கோவில் தெரு ஆக்கிரமிப் பை  அகற்ற வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஆர். ராமச்சந்திரன் வெளியிட்ட அறிக்கை:

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், வெண்டையம்பட்டி கிராமத்தில் காளியம்மன் கோவில் தெரு ஆக்கிரமிப்பில் உள்ளது தொடர்பாக சர்வே செய்து, ஆக்கிரமிப்பு அகற்றி ,குண்டு குழியுமான ,மோசமான சாலையை சீர்படுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆகஸ்ட் 17 -ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தினையொட்டி பூதலூர் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் 30 நாட்களுக்குள் பிரச்சனைக்குரிய காளியம்மன் கோவில் தெரு ஆக்கிரமிப்பு ஆய்வு செய்து, சர்வே நடத்தி சாலைகள் சீர்படுத்தப்படும் என உறுதி அளித்தனர்.

அவர்கள் உறுதி அளித்த அடிப்படையில் வெண்டையம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சர்வே செய்வதற்கான படியையும் கட்டியுள்ளார். இது தொடர்பாக ஒரு மாதத்திற்கு மேலாகியும் எவ்வித நடவடிக்கையும் இல்லாத நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நவம்பர் 15.11.2023. அன்று காத்திருப்பு போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது .

இந்நிலையில் பூதலூர் வட்டாட்சியர் அவர்கள் 14.11.2023 அன்று சர்வே செய்து ,மோசமான சாலைகள் சீர்படுத்தப்படும் எனவும்,சர்வே செய்ய வரும்போது அதற்குரிய ஆவணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும் என்று கடிதம் அளித்துள் ளார்.

இந்த கடிதத்தின் அடிப்படையில் மேலும் தாமதம் செய்யாமல், குறிப்பிட்ட தேதியில் இந்த பிரச்னையை சர்வே செய்து, ஆக்கிரமிப்பு அகற்றி,சாலையை சீரமைத்து தர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்  என அதில் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top