ஈரோடு வடக்கு மாவட்டத்தில் உள்ள திமுக மாநில விவசாய அணி இணைச் செயலாளர் கள்ளிப்பட்டி மணியின் அரசியல் செயல்பாடுகள் திமுக நிர்வாகிகளையும் தொண்டர்களையும் ஈர்த்து வருகிறது.
திமுக மாநில விவசாய அணி இணைச் செயலாளர் கள்ளிப்பட்டி மணியின் கட்சி செயல்பாடுகளை தொண்டர்களின் கவனம் பெற்றுவருகிறது.
ஈரோடு திமுத வடக்கு மாவட்டத்தைச் சார்ந்தவரும் திமுக விவசாய அணி மாநில இணை செயலாளராக பணியாற்றி வருபவர் கள்ளிப்பட்டி மணி. இவர் கட்சி நிர்வாகிகள் சுக துக்கங்களில் தவறாமல் கலந்து கொண்டு தோழமையுடன் துணை நிற்கிறார்.
இதன்காரணமாக கள்ளிப்பட்டி மணியின் அரசியல் செயல்பாடுகள் திமுகவினரை ஈர்த்துள்ளது. ஈரோடு வடக்கு மாவட்ட திமுகவில் பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகளின் செயல்பாடுகள் கட்சி தொண்டர்களுக்கு அதிருப்தி அளிக்கும் வகையிலேயே இருந்து வருகிறது.
இச்சூழ்நிலையில் விவசாய அணி சார்பில் கள்ளிப்பட்டியில் நடந்த சமத்துவ பொங்கல் விழா , வாகன பேரணி மற்றும் மறைந்த நிர்வாகிகளுக்கு மரியாதை சேர்ப்பது போன்ற நிகழ்ச்சிகளில் கள்ளிப்பட்டி மணியின் செயல்பாடுகள் கட்சி தொண்டர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்களும் மூத்த நிர்வாகிகளும் கூறுகின்றனர்.
திமுக மீது மக்களுக்கு ஒரு வகையான சலிப்பு தன்மை ஏற்பட்டு வரும் நிலையில், தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் இது போன்ற நிர்வாகி மீது கட்சி மேலிடம் தனி கவனம் செலுத்தி ஊக்கப்படுத்தினால், கட்சியின் செல்வாக்கு உயரும் என்பதே கட்சி நிர்வாகிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.