Close
நவம்பர் 21, 2024 7:01 மணி

வேலூரில் பாஜக கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம்

வேலூர், மாங்காய் மண்டி அருகே உள்ள மைதானத்தில் வேலூர் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், புதிய நீதி கட்சி தலைவரும், பாஜக கூட்டணி கட்சி வேட்பாளருமான ஏ.சி.சண்முகம் அவர்களை கூட்டணி கட்சியினர் அண்ணா கலையரங்கத்திலிருந்து மாங்காய் மண்டி கூட்ட மைதானம் வரை மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்து அவரை வரவேற்று, அறிமுகப்படுத்தினர்.

பின்னர், வேலூர் நாடாளுமன்ற தொகுதியின் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் ஏ.சி.சண்முகம் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையில், மோடி அரசின் பாரதிய ஜனதா கட்சி, வேலூர் மக்களுக்கு செய்துள்ள பல்வேறு நலத்திட்டங்கள், விமான நிலையம் அமைக்க 44 கோடி, இரயில்வே நிலைய சீரமைப்பு 167.53 கோடி, சாலையேர வியாபாரிகளுக்கு கடனுதவி, 110790 கழிப்றை வசதி, 139575 குடிநீர் வசதி, 28504 குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீடு குறித்தும் மற்றும் வரவிருக்கின்ற சிறப்புத் திட்டங்களைப் பற்றியும் பொது மக்களுக்கு விளக்கினார்.

அதுமட்டுமின்றி, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவுடன் வேலூரில் வணிக வளாகம் கட்டிடத்திற்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக கூறினார்.

இக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் என்.டி.சண்முகம், பாரதிய ஜனதா கட்சி மாவட்ட செயலாளர் வெங்கடேசன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் அருணோதயம், ஓ.பி.எஸ் அணி, மாவட்ட கழக செயலாளர் கோதண்டன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், பொறுப்பாளர். பாண்டுரங்கன், இந்திய ஜனநாயகக் கட்சி மாவட்ட தலைவர் சி.பாபாஜி, புதிய நீதிக்கட்சி செயல் தலைவர் ஏ.ரவிக்குமார், மாவட்ட செயலாளர் பிரம்மாஸ் செந்தில் உள்பட மாநில, மாவட்ட, கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என 6000-க்கும மேற்பட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top