Close
மே 17, 2024 4:12 காலை

திருவண்ணாமலையில் தேர்தல் விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம்

மராத்தான் ஓட்டத்தை தொடங்கிவைத்து, மாணவிகளுடன் சேர்ந்து ஓட்டத்தில் பங்கேற்று விழிப்புணா்வு ஏற்படுத்திய ஆட்சியர்

மக்களவைத் தேர்தலில் 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவண்ணாமலையில் மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
இந்திய மக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஜனநாயகத்தின் கடமையான வாக்களிக்கும் உரிமையை அறிவுறுத்தும் வகையில் பொதுமக்களிடையே 100 சதவீத வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சி துறை, மகளிர் சுய உதவிக் குழுக்கள், வேளாண்மை துறை மூலம் வாக்காளர்களுக்கு வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை: மக்களவைத் தேர்தலில் 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவண்ணாமலையில் மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்து, மராத்தான் ஓட்டத்தை தொடங்கிவைத்து, மாணவிகளுடன் சேர்ந்து ஓட்டத்தில் பங்கேற்று விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

இதில், திருவண்ணாமலை நகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளி, டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளி, தியாகி அண்ணாமலைப் பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி, சண்முகா தொழில்சாலை மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் இருந்து 300- க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனா்.
திருவண்ணாமலை-வேலூா் சாலையில் உள்ள அண்ணா நுழைவு வாயிலில் இருந்து தொடங்கிய மாரத்தான் ஓட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது. இந்த ஒட்டத்தில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ரிஷப், மாவட்ட விளையாட்டு அலுவலா் நோய்லின் ஜான், மாவட்ட திட்ட அலுவலர்கள் வட்டாட்சியர்கள் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள், நகராட்சி ஆணையாளர் மற்றும் பணியாளர்கள், தேர்தல் மேற்பார்வையாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், மற்றும் மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top