வாடிப்பட்டியில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் ஆர். பி. உதயகுமார் முன்னிலையில் மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில், பாஜக சமயநல்லூர் ஒன்றிய பொதுச்செயலாளர் பாலபாரதி தலைமையில் பாஜகவினர் 40க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் சேர்ந்தனர் .
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக, திருப்பரங்குன்றத்தில் திமுக அரசை கண்டித்து நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு, வாடிப்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் ஆர். பி . உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.
அப்போது, மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் மேற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில், சமயநல்லூர் ஒன்றிய பாஜக தலைவர் பாலபாரதி தலைமையில் 40க்கும் மேற்பட்ட பாஜகவினர் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, ஆர்.பி. உதயகுமார் முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் போது , முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மகேந்திரன், மாணிக்கம், எம். வி. கருப்பையா, தமிழரசன், டாக்டர் சரவணன், எஸ். எஸ். சரவணன், ஒன்றியச் செயலாளர்கள் வாடிப்பட்டி வடக்கு காளிதாஸ், தெற்கு கொரியர் கணேசன், அலங்காநல்லூர் ரவிச்சந்திரன், பேரூராட்சி செயலாளர் வாடிப்பட்டி டாக்டர் அசோக், வாடிப்பட்டி சேர்மன் ராஜேஷ் கண்ணா மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.