Close
டிசம்பர் 4, 2024 7:18 மணி

பிறந்தநாளையொட்டி முதல்வரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்று தனது பிறந்த நாள் விழாவை கொண்டாடினார்.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஆகவும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகவும் இருப்பவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இவர் மறைந்த திமுக முன்னணி தலைவரும், முன்னாள் அமைச்சருமான அன்பில் தர்மலிங்கத்தின் பேரன் மற்றும் மறைந்த முன்னாள் திமுக இளைஞர் அணி மாநில துணை செயலாளர் முன்னாள் எம்எல்ஏ அன்பில் பொய்யாமொழியின் மகன் ஆவார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு டிசம்பர் 2 இன்று பிறந்த நாள் ஆகும். தனது பிறந்த நாளையொட்டி திமுக தலைவரும், தமிழக முதல்வருமான முக ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்து பெற்றார்.

நாளை டிசம்பர் 3ம் தேதி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் உள்ள தனது அலுவலகத்தில் தனது பிறந்த நாள் விழாவை கொண்டாடுகிறார். அப்போது கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top