Close
மே 26, 2025 3:58 காலை

டில்லியில் தேர்தல் பூத் ஏஜெண்டுகளுக்கான பயிற்சி திமுக சார்பில் ராஜேஷ்குமார் எம்.பி., பங்கேற்பு

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் பூத் நிலை முகவர்களுக்கு (BLA) இரண்டு நாள் பயிற்சித் திட்டத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை தொடங்கியது.
இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனத்தில் (IIIDEM) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரண்டு நாள் பயிற்சித் திட்டத்தில் 11 தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 229 BLAக்கள் (BLA-I & BLA-II) பங்கேற்றனர்.

இந்திய தேர்தல் கமிஷன் சார்பில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சார்ந்த, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின், தேர்தல் பூத் ஏஜெண்டுகளுக்கான (பிஎல்ஏ) 2 நாட்கள் பயிற்சி முகாம் டில்லியில் நடைபெற்றது. இந்த பயிற்சியில் திமுகவின் பிரதிநிதியாக, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளாரும், ராஜ்யசபா எம்.பியுமான ராஜேஷ்குமார் கலந்துகொண்டார்.

2 நாட்கள் நடைபெற்ற பயிற்சியின் நிறைவில் இந்திய தேர்தல் கமிஷன் சார்பில் ராஜேஷ்குமார் எம்.பிக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top