Close
செப்டம்பர் 20, 2024 6:59 காலை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எஸ்டிபிஐ கட்சி ஆதரவு

ஈரோடு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எஸ்டிபிஐ கட்சி ஆதரவு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில்  திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு  ஆதரவளிப்பதென எஸ்.டி.பி.ஐ கட்சி தீர்மானித்துள்ளது.

இத தொடர்பாக  ஈரோடு தெற்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சமூக ஊடக அணி வெளியிட்ட தகவல்: எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்களிடம்,  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ்.இளங்கோவன், ஈரோடு தெற்கு மாவட்ட எஸ்டிபிஐ  கட்சியின் அலுவலகத்திற்கு வருகை தந்து  தனக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

அதனடிப்படையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியின் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் வேட்பாளராக போட்டியிடும். ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு, எஸ்டிபிஐ  கட்சி தனது முழு ஆதரவினையும் அளிக்கிறது.

ஈரோடு
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவனுக்கு ஆதரவளித்து பேசிய எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத்தலைவர் நெல்லை முபாரக்

இந்த தேர்தலில் அவர் வெற்றி பெற்று ஈரோடு கிழக்குத் தொகுதியின் வளர்ச்சிக்கும், தொகுதி மக்களின் முன்னேற்றத்துக்கும், தமிழகம் மற்றும் சிறுபான்மை சமூக மக்களின் கோரிக்கைகள் நிறைவேறவும் பாடுபட வேண்டும் என கூறி தனது ஆதரவையும் வாழ்த்துகளை நெல்லை முபாரக் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோவை மண்டல தலைவர் ராஜா உசேன், SDTU தொழிற்சங்க மாநில பொருளாளர் ஜே.எம்.ஹசன் பாபு, காங்கிரஸ் கட்சியின் மாநில விவசாய அணி பொறுப்பாளர் முத்துபேட்டை ஷேக் பரீத்.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் ப.முகமது லுக்மானுல் ஹக்கீம், வடக்கு மாவட்ட தலைவர் முஹசின் காமினூன், பொதுச்செயலாளர் சமீருல்லா, சேலம் மாவட்ட தலைவர் அப்சர் அலி.

காங்கிரஸ் கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம், துணைத் தலைவர் ராஜேஷ் ராஜப்பா, முன்னாள் மாவட்ட தலைவரும் மாமன்ற உறுப்பினருமான  ஈ.பி.ரவி, மண்டல தலைவர்கள் விஜயபாஸ்கர், ஜாபர் சாதிக், திமுக மாநில தலைமை கழக பேச்சாளர் ஈரோடு இறைவன்.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட துணைத் தலைவர் ஜம்பை.ரபீக், மாவட்ட செயலாளர்கள் க.முனாப், அ.சாகுல் ஹமீது, பொருளாளர் ம.ஃபர்ஹான் அஹமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top