Close
நவம்பர் 21, 2024 7:41 மணி

தேர்தல் நடத்தை விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் : நாமக்கல் கலெக்டர்..!

நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா.

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், அனைவரும் அதனை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

இந்தியாவில் நடைபெற உள்ள, 18-வது பார்லி. தேர்தல் வாக்குப்பதிவு நாடு முழுவதம் 7 கட்டங்களாக நடைபெறும் என மத்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள. இந்த அறிவிப்பின்படி தமிழகத்தில் வருகிற ஏப். 19ம் தேதி வெள்ளிக்கிழமை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்துவது இந்திய தேர்தல் கமிஷனின் குறிக்கோள். மேலும், வாக்காளர்கள் தாம் யாருக்கு வாக்கு அளித்தோம் என்பதை கண்டறியும் ஒப்புகைச் சீட்டு நடைமுறை (விவிபேட் மெசின்) அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பயன்படுத்தப்படும். வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ள தங்களது விவரங்களை 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமாக சரிபார்த்துக் கொள்ளலாம்.

எலக்ட்ரானிக் வாக்குப் பதிவு இயந்திரத்தில் வேட்பாளருக்கு நேரே அவரது புகைப்படம் இடம் பெற்று இருக்கும்.தேர்தல் கமிஷன் உத்தரவின் பேரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் 16ம் தேதி மாலை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

நாமக்கல் பார்லி. தொகுதி:

நாமக்கல் மாவட்டத்தில் சங்ககிரி, ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த 6 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 1,660 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தில் 22.01.2024- தேதியின்படி ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை: 7,04,270, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை: 7,39,610, இதர வாக்காளர்களின் எண்ணிக்கை: 156 என மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை: 14,44,036 ஆகும்

வாக்குப்பதிவு :

நாமக்கல் லோக்சபா தொகுதிக்கான தேர்தல் அட்டவணையின்படி வேட்புமனுக்கள் மார்ச் 20 ஆம் தேதி முதல் மார்ச் 27 ஆம் தேதி வரைப் பெறப்படும். மார்ச் 28 ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்கள் மார்ச் 30 ஆம் தேதி வரை திரும்பப் பெறலாம். தேர்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி நடைபெறும். பதிவான வாக்குகள் வருகிற ஜூன் 4ம் தேதி, திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் அமைக்கப்படட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஜூன் மாதம் 4 ஆம் தேதி நடைபெறும்.

கட்டுப்பாடுகள் :

நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், மாவட்டத்தில், அரசு அனுமதி பெறாமல் தனியார் சுவர்களில் செய்யப்பட்டுள்ள கட்சிகளின் தேர்தல் விளம்பரங்களை உடனடியாக அகற்றிக் கொள்ள வேண்டும். பொது இடங்களில் உள்ள கட்சிக் கொடி மரங்களை அகற்றிக் கொள்ள வேண்டும். இரவு 10 மணி முதல் காலை 8 மணி வரை எந்த பிரச்சார நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க பறக்கும் படைக் குழுக்கள், நிலைக் கண்காணிப்புக் குழுக்கள், வீடியோ கண்காணிப்புக் குழுக்கள், வீடியோ பார்வைக் குழுக்கள், கணக்குக் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் மாவட்டம் முழுவதும் இரவு பகல் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறைகளை அரசு அலுவலர்கள், அரசியல் கட்சிகள், வாக்காளர்கள் ஆகிய அனைவரும் தவறாமல் கடைபிடித்து, நாமக்கல் மாவட்டத்தில் சிறந்த முறையில் லோக்சபா தேர்தலை நடத்த அனைவரும் ஒத்துழைக் வேண்டும்.

தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டது தொடர்பான புகார்களை நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் 04286-280081, 04286-280082, 04286-280083, 04286-280084 ஆகிய தொலைபேசி எண்ணிகளிலும், 18004257021 கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம்.

மேலும், தெரிவிக்கப்படும் புகார்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு விசாரணைகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top