Close
ஜனவரி 28, 2025 11:10 மணி

வினேஷ் போகட் எங்கு சென்றாலும், அங்கு அழிவு தான்: பிரிஜ் பூஷன்

வினேஷ் போகட்டின் வெற்றி குறித்து பேசிய  இந்திய மல்யுத்த சங்கத்தின் முன்னாள் தலைவரும், பாஜ தலைவருமான பிரிஜ் பூஷன் சிங் அவர் எங்கு சென்றாலும் அழிவு தான் என கூறியுள்ளார்

ஹரியானாவின் ஜூலானா தொகுதியில் இருந்து வினேஷ் போகட்டின் வெற்றி குறித்து கொடுத்த இந்திய மல்யுத்த சங்கத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் கூறுகையில்,  இந்த வெற்றி வரவேற்கத்தக்கது. ஆனால் அவர் எங்கு சென்றாலும். அழிவு மட்டுமே நிகழ்கிறது. அவர்  மல்யுத்தத்தில் இருந்தார். அதனால் இரண்டு வருடங்கள் எங்கள் மல்யுத்தத்தை அழித்தார். இப்போது காங்கிரசுக்கு சென்றுவிட்டார். நேற்று வரை முழுப்பெரும்பான்மை, மிகப்பெரும்பான்மை, காங்கிரஸுக்கு முழுப்பெரும்பான்மை, அபரிமிதமான பெரும்பான்மை என்று எக்ஸிட் போல் காட்டிக்கொண்டிருந்தது, இப்போது காங்கிரஸ் அழிந்துவிட்டது. போகட் வென்றார். ஆனால் காங்கிரஸ் அழிந்தது. காங்கிரசுக்கு சென்றார். மேலும் காங்கிரஸ் அழிந்தது என்று கூறியுள்ளார்

ஹரியானாவில் தேர்தல் கமிஷன் மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியது குறித்து பிரிஜ் பூஷன் கூறுகையில், அவர்கள் எப்போதும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.  வெற்றி பெற்றால் அதை பற்றி பேச மாட்டார்கள், ஆனால், தோல்வி ஏற்பட்டால்  பழி சுமத்தப்படுகிறது என்று கூறினார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top