Close
செப்டம்பர் 19, 2024 11:14 மணி

அங்கன்வாடி மையங்களை மூடுவதைக் கைவிடக்கோரி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள்

அங்கன்வாடி மையங்களை மூடுவதைக் கைவிட வேண்டு மென வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் வியாழக்கிழமை புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு  சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.விஜயலெட்சுமி தலைமை வகித்தார்.

கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் ஏ.சி.செல்வி உரையாற்றினார். போராட்டத்தை ஆதரித்து சிஐடியு மாநில செயலாளர் ஏ.ஸ்ரீதர், மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா ஆகியோர் பேசினர். சுங்கத்தின் மாநில பொருளாளர் எஸ்.தேவமணி நிறைவுரையாற்றினார். முடிவில் மாவட்டப் பொருளாளர் எஸ்.சவரியம்மாள் நன்றி கூறினார்.
கோரிக்கைகள்:
பல  ஆண்டுகளாக இருந்து வரும் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். குழந்தைகளின் ஊட்டச்சத்து, கர்ப்பிணிப் பெண்கள், மற்றும் பாலூடடும் தாய்மார்களின் நலன்கருதி அங்கன்வாடி மையங்களை மூடுவதைக் கைவிட வேண்டும்.

தேர்தல் பணிகளான வாக்குச்சாவடிப் பணிகளை பார்க்கச் சொல்லி அங்கன்வாடி ஊழியர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. அங்கன்வாடி மையங்களில் கேமரா பொருத்துவதை கைவிட வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களை உயர் அதிகாரிகள் வீடுகளில் வேலைகளில் ஈடுபடுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை கள் ஆர்ப்பாட்டத்தின் போது எழுப்பப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top