Close
நவம்பர் 21, 2024 11:51 மணி

திம்பம் மலைப்பாதையில் கனரக வாகனங்கள் மீண்டும் செல்ல அனுமதிக்க வேண்டும்

ஈரோடு

திம்பம் மலைப்பாதையில் லாரிகளை அனுமதிக்கக் கோரிக்கை

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதையில் 10 மற்று 12 சக்கர சரக்கு வாகனங்கள் மீண்டும் செல்ல அனுமதிக்க வேண்டுமென திம்பம் மலைப்பாதை லாரி உரிமையாளர்கள் மற்றும் ஒட்டுனர்கள் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையானது சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதி வழியாக செல்கிறது. 27 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட திம்பம் மலைப்பாதை தமிழ்நாடு – கர்நாடகா ஆகிய இரு மாநில இணைக்கும் முக்கிய மலைப்பாதை திகழ்கிறது.

திண்டுக்கல் – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந் துள்ளதால் இந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வந்தன. இந்த வழியில் வனவிலங்குகள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்தது.

ஆறு சக்கர வாகனங்கள் கொண்ட லாரிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டது. அந்த லாரிகளும் 16.2 டன் மட்டுமே எடையுடன் கூடிய வாகனங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப் படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனத்துறையினர் ஆறு சக்கர லாரிகள் லாரி எடையுடன் 16.2 டன் அனுமதித்ததால் 12  சக்கர லாரிகள் பாதிக்கப்பட்டன. லாரி எடை மட்டும் 7 டன் சரக்குகள் 9.2 டன் என 16.2 டன் மட்டுமே அனுமதிக்கப்படும் என அறிவிப்பால் லாரி ஓட்டுனர்கள் படி மற்றும் வாடகை என கணக்கிடும் போது பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மேலும், லாரி தொழிலை நம்பி உள்ள நூற்றுக்கணக்கான ஓட்டுநர்கள் அதனை நம்பி உள்ள பணியாளர்கள் மற்றும் சத்தியமங்கலம் முதல் ஆசனூர் வரை சாலையோரம் உணவகங்கள் மற்றும் வணிகர்களுக்கு பாதிக்கப்பட்டனர்.

இது குறித்து சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 10 மற்றும் 12 சக்கர  லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பண்ணாரி சோதனை சாவாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் எடை மேடை அமைக்க வேண்டும். எடை போடுமிடத்தில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும். 16.2 டன் எடைக்கும் மேல் உள்ள லாரிகள் மேற்கொண்டு செல்ல அனுமதிக்க கூடாது.

16.2 டன் எடையுள்ள 10 மற்றும் 12 சக்கர சரக்கு வாகனங்க ளையும் மீண்டும் செல்ல அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என திம்பம் மலைப்பாதை 10 மற்றும் 12 சக்கர லாரி ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர் கூட்டத்தில் ஆலோசிக் கப்பட்டது. கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top