Close
நவம்பர் 22, 2024 1:36 காலை

வறட்சியால் பாதிக்கப்பட்ட குறுவைப் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் வழங்கக்கோரி தமிழ்நாடு விவசாய சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

தஞ்சையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாய சங்கத்தினர்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட குறுவைப் பயிர்க ளுக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் வழங்கக்கோரி தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் தஞ்சையில் செவ்வாய்க்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

 டெல்டா மாவட்டங்களில் நடப்பு பருவத்தில் பயிரிடப்பட்ட குருவை சாகுபடிகள் தண்ணீர் இன்றி ஏறத்தாழ 25 ஆயிரம் ஏக்கர் வறட்சியால் பாதிக்கப்பட்டு முற்றிலும் பாழானது. பாதிக்கப்பட்ட குறுவைப் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ 35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் தமிழ்நாடு அரசு அறிவித்த ஹெக்டேருக்கு ரூ12.500 நிவாரணம் போதாது. ஏக்கருக்கு ரூபாய் 35 ஆயிரம் வழங்க வேண்டும் ,சம்பா சாகுபடிக்கான தண்ணீர் உடனடியாக பெற்று தர வேண்டும், 22, 23 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு இழப்பீட்டை மறு ஆய்வு செய்து உரிய இன்சூரன்ஸ் நிதி வழங்க வேண்டும்.

பயிர் காப்பீட்டு திட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று ஒன்றிய, தமிழ்நாடு அரசுகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில்(சிபிஐ சார்பு) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் ஆர்.இராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சோ.பாஸ்கர் முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி ஆர்ப்பாட்டத்தை. தொடக்கி வைத்து உரையாற்றினார். விவசாய சங்கத்தின் தேசிய குழு உறுப்பினர் அ.பன்னீர்செல்வம்  நிறைவு செய்து வைத்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் கோ.சக்திவேல் , மாவட்ட பொருளாளர் ந.பாலசுப்பிரமணியன், ஏஐடியூசி மாவட்ட செயலாளர்கள் துரை.மதிவாணன், ஆர். பி.முத்துக்குமரன், அரசு பணியாளர் சங்க மாநில துணை தலைவர் தி.திருநாவுக்கரசு, காவிரி தாய் இயற்கை வழி வேளாண் நடுவம் சீர்.தங்கராசு,

தமிழ் தேச தன்னுரிமை கட்சி தலைவர் அ.வியனரசு, விவசாய சங்க மாவட்ட செயலாளர்கள் துரை.பன்னீர்செல்வம், சி.ஜெயராஜ், மாவட்ட துணை தலைவர்கள் அ.கலிய பெருமாள், ச.வடிவேல்மூர்த்தி, நிர்வாகிகள் த.கிருஷ்ணன், அய்யாகண்ணு, இரவி, வீரப்பன்,அஜய் குமார், கருணாமூர்த்தி, அண்ணாதுரை, செல்லக்கண்ணு, சீனி.முருகையன், முத்தமிழ் செல்வன், மதியழகன், சண்முகவள்ளி , அன்பழகன், அண்ணாதுரை, வீரப்பன், வைரவமூர்த்தி, அய்யாராசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து கோரிக்கை  தொடர்பான மனு தமிழ்நாடு முதலமைச்சர், வேளாண் துறை அமைச்சர், வருவாய் துறை அமைச்சர், வேளாண் இணை இயக்குநர், தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு அளிக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top