Close
நவம்பர் 21, 2024 11:31 மணி

தெருவியாபாரிகள் சட்டம் 2015 ஐ முழுமையாக அமல்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் மாநிலந்தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தெருவியாபாரிகள் சட்டம் 2015 ஐ முழுமையாக அமல்படுத்த வேண்டுமென வலியுறுத்தி தஞ்சையில் தெரு வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கைகள்: ஏழை எளிய நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கும், குடும்பத் தேவைகளை நிறைவேற்று வதற்கும், சுயமரியாதையுடன் வாழவும் ஆங்காங்கே தெருவோரங்களில் காய்கறிகள், பூக்கள், பல சரக்கு பொருட்களை வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து அச்சுறுத்தல் இருந்து வந்தது.இவர்களை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் ஏஐடியூசி நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தியதன் விளைவாக கடந்த 2014 -ஆம் ஆண்டு பாராளு மன்றத்தில். தெருவியாபாரிகள் சட்டம் நிறைவேற் றப்பட்டு , 2015 ம் ஆண்டு நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தது.

பல ஆண்டுகள் ஆகியும் சட்டம் முழுமையாக அமல்படுத்த வில்லை. தமிழ்நாடு முழுவதும் தெருவியாபாரிகள் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த தமிழ்நாடு அரசை வலியுறுத்தி  தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் மாநிலந் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆர்.பி.முத்துக்குமரன் தலைமை வகித்தார். ஏஐடியூசி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.சந்திரகுமார் ஆர்ப்பாட்டத்தினை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார். மாநில செயலாளர் ஆர்.தில்லைவனம் முடித்து வைத்து உரையாற்றினார்.

 கோரிக்கைகளை விளக்கி மாவட்ட தலைவர் வெ.சேவையா, வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் க.அன்பழகன், நுகர்பொருள் வாணிபக் கழக ஏஐடியூசி சங்க மாநில பொருளாளர் தி.கோவிந்தராஜன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து சங்க மாநிலத் துணைத் தலைவர் துரை.மதிவாணன்,

மின் வாரிய சங்க மாநில துணைத்தலைவர்பொன்.தங்கவேல், தெவியாபாரிகள் சங்க மாவட்ட தலைவர் சிவக்குமார், கும்பகோணம் மார்க்கெட் சங்க தலைவர்கள் சரவணன், காமராஜ் , ரமேஷ், பாலகிருஷ்ணன் ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் பி.அப்பாதுரை.

கட்டுமான சங்க துணை தலைவர் பி.செல்வராஜ், கூட்டுறவு சங்க தலைவர் வி.கோவிந்தன். உடல் உழைப்பு சங்க பொருளாளர் பி.சுதா, தையல் செயலாளர் கே.கல்யாணி, தஞ்சை பழைய பேருந்து நிலையம் சங்க தலைவர் சத்யா, செயலாளர் கண்ணன், மாலை நேர காய்கறி அங்காடி நிர்வாகிகள் மணிகண்டன், அயூப் கான் ஆகியோர் உரையாற்றினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் தெருவியாபாரிகள் சட்டத்தை அமல்படுத்த குறிப்பிட்ட காலக்கெடுக்க நிர்ணயித்து முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும், பேரூராட்சி, ஊராட்சி , மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தெரு வோரத்தில் வியாபாரம் செய்து வருபவர்களுக்கு வியாபாரச் சான்று மற்றும் ஸ்மார்ட் கார்டு வழங்க வேண்டும்.

தெரு வியாபாரிகள் சட்டப்படி அனைத்து அதிகாரங்களும் வணிக குழுவிற்கு உள்ளது, காவல் துறை, உள்ளாட்சி, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், அலுவலர்கள் வணிகக் குழுவின் அதிகாரத்தை மீறி தெரு வியாபாரிகளை அச்சுறுத்தவோ, இடையூறு செய்யவோ, அப்புறப்படுத்த கூடாது, வணிக குழுவிற்கான கூட்டம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

வியாபாரிகளின் வாடகையை சட்டத்திற்கு உட்பட்டு வசூல் செய்யப்பட வேண்டும், வங்கி மூலம் தெரு வியாபாரிகளுக்கு கடன் அளித்து உதவ வேண்டும்,தொழிற்சங்க ஒத்துழைப் புடன் திரும்பச் செலுத்தும் நடைமுறையை கொண்டு வர வேண்டும், இவர்களின் பொருட்களை பாதுகாக்க பாதுகாப் பறை,அவசர இயற்கை உபாதைகளுக்கு கழிவறை, குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top