Close
டிசம்பர் 12, 2024 10:40 காலை

இளையனார்வேலூர் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா

காஞ்சிபுரம் அடுத்த இளையனார்வேலூர் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம் இளையனார் வேலூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் தலமாக விளங்கும் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. வேல் கொண்டு இரு அசுரர்களை அழித்து இளைப்பாறியதால் இந்த ஊர் இப்பெயர் பெற்றுள்ளது.

திருமுருகானந்த  கிருபானந்தா வாரியார் அவர்களால் குடமுழுக்கு நடத்தப்பட்ட திருக்கோயில் என்பதும் இரண்டு திருப்புகழ் பாடல்கள் பாடப்பட்டது எனவும் வரலாறு உண்டு.

அவ்வகையில் இத்திருக்கோவில் கடந்தாண்டு புணரமைப்பு பணியினை இந்து சமய அறநிலை துறை அறிவுறுத்தலின்படி திருக்கோயில் நிர்வாக குழு அறங்காவலர் கோதண்டன் மற்றும் உபயதாரர்கள் இணைந்து திருப்பணி தொடங்கினர்.

திருப்பணி நிறைவுற்ற நிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கணபதி ஓமத்துடன் மகா கும்பாபிஷேக யாக சாலை பூஜை தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து நாள்தோறும் காலை மற்றும் மாலை வேலைகளில் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்று இன்று காலை 6 ஆம் காலம் இறுதிக்கட்ட பூஜை நடைபெற்ற பூரணாகதி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து திருக்கோயில் அர்ச்சகர் தலைமையில் சிவாச்சாரியார்கள் திருக்குடம் புறப்பாடு நடைபெற்று ராஜகோபுரம் மூலவர் விமானம் உற்சவர் மற்றும் பரிகார திருக்கோயில்கள் என அனைத்திற்கும் காலை 9 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் காஞ்சிபுரம் உத்திரமேரூர் வாலாஜாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்து மகா கும்பாபிஷேகத்தை கண்டு இறையருள் பெற்றனர்.

மகா கும்பாபிஷேக விழாவிற்கு வருகை புரிந்த பக்தர்களுக்கு அன்னதானங்கள் பல்வேறு தரப்பிலிருந்து வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பகல் 12 மணிக்கு சிறப்பு மகா அபிஷேகம் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு நடைபெற உள்ளது. மகா கும்பாபிஷேக திருப்பணிகளை செயல் அலுவலர் கதிரவன் அறங்காவலர் குழு நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர் கமலக்கண்ணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top