Close
அக்டோபர் 6, 2024 12:01 மணி

பாரதியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி: கொங்கு கலை அறிவியல் கல்லூரி முதலிடம் 

ஈரோடு

பல்கலைக்கழக மண்டல கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் கோப்பை வென்ற ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி அணி

பாரதியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி: கொங்கு கலை அறிவியல் கல்லூரி முதலிடம்

பாரதியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டியில் கொங்கு கலை அறிவியல் கல்லூரி அணி முதலிடம் பிடித்து சாதனை படைத்தது

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் பாரதியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. போட்டியினை கொங்கு கலை அறிவியல் கல்லூரி தாளாளர் தங்கவேல், முதல்வர் வாசுதேவன் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.

இந்த கிரிக்கெட் போட்டியில் 15 கல்லூரிகளை சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாடின இறுதி சுற்றுக்கு கொங்கு கலை அறிவியல்- கல்லூரியும், கோபி கலை அறிவியல் கல்லூரியில் தகுதி பெற்று விளையாடியது.

கொங்கு கலை அறிவியல் கல்லூரி அணி முதலில் பேட்டிங் செய்தனர். 25 ஓவர் முடிவில் 140 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தனர். அதனை தொடர்ந்து இரண்டாவதாக பேட்டிங் செய்த கோபி கலை அறிவியல் கல்லூரி விக்கெட் இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தனர். 3 ரன்கள் வித்தியாசத்தில் கொங்கு கலை அறிவியல் கல்லூரி அணி வெற்றி பெற்று முதல் பரிசை வென்றனர்.

இரண்டாம் இடத்தை கோபி கலை அறிவியல் கல்லூரியும்,  3 ஆம்  இடத்தை ஈரோடு கலை அறிவியல் கல்லூரி அணியினரும், 4 -ஆம்  இடத்தை கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரி அணியினர் பெற்றனர்.

பாரதியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டியில் ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி அணியினர் முதலிடம் பிடித்து கோப்பையை வென்றனர்.

இப்போட்டியின் பரிசளிப்பு விழாவில் மாவட்ட கிரிக்கெட் கழகத்தின் பொருளாளர் அருண் ஆறுமுகம். இணைச் செயலாளர் சண்முகசுந்தரம், கல்லூரி முதல்வர் முனைவர் வாகதேவன் ஆகியோர் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு கோப்பையும், சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினர்.

இப்போட்டிக்கான ஏற்பாடுகளை கொங்கு கலை அறிவியல் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் முனைவர் சங்கர் செய்திருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top