Close
ஏப்ரல் 4, 2025 11:05 காலை

காரியாபட்டியில் தைப் பொங்கலை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி

விருதுநகர்

காரியாபட்டி பேரூராட்சி தலைவர் ஆர்.கே. செந்தில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, ஸ்மாசஸ், ஸ்பார்ட் டென்ஸ். மற்றும் அல்ஹிதாயா கிரிக்கெட் கிளப் சார்பாக தை திருநாளை முன்னிட்டு, விருதுநகர் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

போட்டியில், பி. புதுப்பட்டி எம். எஸ் .டி. செவன் அணி முதல் பரிசையும், காரியாபட்டி கிரீன் ஸ்டார் அணி 2 -வது பரிசையும், இரண்டாவது பரிசையும் நாசர் புளியங்குளம் எம்.சி.சி. அணி 3-ம் பரிசையும் பெற்றனர். மேலும், பாய் டீம் 4-வது பரிசையும், அணியும் பாலமேடு சச்சின் பாய்ஸ் அணி 5 – வது பரிசையும் பெற்றது.
போட்டியில், வெற்றி பெற்றவர் களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி மண்டபத்தில் நடை பெற்றது. காரியாபட்டி பேரூராட்சித்தலைவர் ஆர்.கே. செந்தில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

சிறந்த ஆட்ட நாயகன் சிம்பு வுக்கு மாவட்ட தி.மு.க சிறுபான் மை பிரிவு துணை அமைப்பாளர் முகமது முஸ்தபா பரிசு வழங்கினார்.

நிகழ்ச்சியில், விடுதலை சிறுத்தைகள் மாவட்டச்செயலாளர் இனியவன், வடக்கு மாவட்ட தி.முக அயலக அணி துணை அமைப்பாளர் இப்ராஹீம் சல்மான் பாரீஸ், தி.மு.க வார்டு செயலாளர் காதியார், அகமது மன்சூர்.திருச்சுழி தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப் பாளர் மனோஜ்குமார். பேரூராட்சி கவுன்சிலர்கள் சங்கரேஸ்வரன் பாண்டியன், சரவணன்.ரெங்கராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top