Close
நவம்பர் 21, 2024 10:43 காலை

பெட்ரோலிய நிறுவனங்களுக்கு இடையேயான கேரம் போட்டிகள் சென்னையில் தொடக்கம்

சென்னை

பெட்ரோலிய நிறுவனங்களுக்கிடையேயான தேசிய அளவிலான கேரம் போட்டிகளை சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்த சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நிர்வாக இயக்குனர் அரவிந்த குமார். உடன் சிபிசிஎல். இயக்குனர்கள் ரோஹித் குமார் அகர்வாலா (நிதி), பி.கண்ணன் (செயலாக்கம்), இணைச் செயலாளர் கௌதம் வதேரா உள்ளிட்டோர் உள்ளனர்.

பெட்ரோலிய நிறுவனங்களுக்கிடையேயான கேரம் போட்டிகள் சென்னையில் தொடக்கம்:4 நாள்கள் நடைபெறுகிறது

பெட்ரோலிய நிறுவனங்களுக்கிடையேயான கேரம் போட்டி சென்னையில்  தொடங்கியது.

பெட்ரோலிய நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களிடையே பல்வேறு விளையாட்டுகளை ஊக்கப்படுத்தும் வகையில்விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கென பெட்ரோலியம் விளையாட்டு மேம்பாட்டு வாரியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி 30-வது கேரம் போட்டி சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.  போட்டிகளை சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (சிபிசிஎல்)  நிர்வாக இயக்குனர் அரவிந்த் குமார் தொடங்கி வைத்தார்.

மார்ச் 19 முதல் 22-ம் தேதிவரை நான்கு நாள்கள் நடைபெறும் இப்போட்டிகளில் ஆண்கள் பிரிவில் சிபிசிஎல், ஐஓசிஎல், ஓஎன்ஜிசி, எச்பிசிஎல்,எம்ஆர்பிஎல், இஐஎல், பிஎல்எல் மற்றும் என்ஆர்எல் ஆகிய 8 அணிகளும், பெண்கள் பிரிவில் இஐஎல்,,சிபிசிஎல், ஐஓசிஎல், ஓஎன்ஜிசி, எச்பிசிஎல்,எம்ஆர்பிஎல் ஆகிய  6 அணிகளும் பங்கேற்கின்றன.  கேரம் போட்டிகளில் . முன்னணி வீரர், வீராங்கணைகள்  பெண்களுக்கான கேரம் விளையாட்டில் உல சம்பியன் பட்டத்தை வென்ற ரஷ்மி குமாரி (ஓஎன்ஜிசி), முன்னாள் உலக சாம்பியன் இளவழகி (ஓஎன்ஜிசி), முதல் தரவரிசை வீராங்கனை காஜல்  குமாரி (ஐஓசிஎல்), மூத்த தேசிய சாம்பியன் கே.ஸ்ரீனிவாஸ் (ஐஓசிஎல்), முன்னாள் உலக சாம்பியன் யோகேஷ் பர்தேஷி (ஐஓசிஎல்) உள்ளிட்டோர் இப்போட்டிகளில்  பங்கேற்க உள்ளனர். .

தொடக்கவிழா நிகழ்ச்சியில்   சிபிசிஎல். இயக்குனர்கள் ரோஹித் குமார் அகர்வாலா (நிதி), பி.கண்ணன் (செயலாக்கம்), இணைச் செயலாளர் கௌதம் வதேரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top