புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி மாரியம்மன் கோவில் தெரு பகுதிநேர நியாயவிலைக் கடை திறக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், மாரியம்மன் கோவில் தெரு பகுதிநேர நியாயவிலைக் கடையை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் .சிவ.வீ.மெய்யநாதன் (02.07.2023) திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினார்.
பின்னர் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:
முதலமைச்சர் பொதுமக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி பொதுமக்களுக்கு தேவையான இடங்களில் புதிய நியாயவிலைக் கடைகள் திறந்து வைக்கப்பட்டு வருகிறது.
இதன்மூலம் பொதுமக்கள் வீண் அலைச்சலை தவிர்ப்பதுடன், தரமான உணவுப் பொருட்களை தங்களது இல்லங்களுக்கு அருகிலேயே பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது.
அரசர்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டுபாட்டில் உள்ள அரசர்குளம் கீழ்பாதி முழுநேர தாய் அங்காடியிலிருந்து பிரிக்கப்பட்டுள்ள மாரியம்மன் கோவில் தெரு பகுதிநேர அங்காடியானது 374 குடும்ப அட்டைகளுடன் பிரதி வாரம் செவ்வாய்கிழமை மட்டும் இயங்கும் வகையில் மாரியம்மன் கோவில் தெரு கிராம மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிநேர நியாயவிலைக் கடை திறந்து வைப்பதன் மூலம் மழை, வெயில் போன்ற இயற்கை சீற்றம் உள்ள காலங்களிலும் பொதுமக்கள் தங்களது வீட்டின் அருகிலேயே அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எனவே இப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கான உணவுப் பொருட்களை தங்களது கிராமத்தி லேயே பெற்றுக்கொள்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது என சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், முதுநிலை ஆய்வாளர் (பொ.வி.தி) மனோகரன், மாவட்ட கவுன்சிலர் சரிதாமேகராஜ், வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதி கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.