Close
நவம்பர் 22, 2024 6:34 மணி

புத்தகம் அறிவோம்… சங்க இலக்கிய பொன்மொழிகள்..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

சங்க இலக்கிய பொன்மொழிகள்” என்ற இந்த நூல் புதுக்கோட்டை மா. மன்னர் கல்லூரி மேனாள் தமிழ்த் துறைத்தலைவர் பேராசிரியர் க.முத்துசாமி உருவாக்கியது.

பேராசியர் சங்க இலக்கியங்களில் ஆழ்ந்த புலமையுள்ளவர்.
கடவுள் வாழ்த்து, அறச் செயல்,இல்லறம், மக்கட்பேறு, நூல்,
வாய்மை, சமுதாயம், வாழ்வியல், ஆட்சி, செல்வம், கொடை,  நட்பு, ஆண்மை, பெண்மை, கவலை என்று மொத்தம் 30 தலைப்புகளில் 300 பொன் மொழிகள் தரப்பட்டுள்ளது.

சங்கப்பாடல்களும், அதற்குரிய பொருளும் – ஒருபக்கம் சங்கப்பாடல் ;அதன் எதிரே அதற்குரிய பொருள்- தரப்பட் டுள்ளது.புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, தொல் காப்பியம், திருமுருகாற்றுப்படை, குறிஞ்சிப்பாட்டு, மதுரைக்காஞ்சி, கலித்தொகை, நற்றினை என்று பல நூல்களிலிருந்து பொன்மொழிகள் தரப்பட்டுள்ளன.

நூல்:  நூல் எனப்படுவது நுவலும் காலை , முதலும் முடிவும் மாறுகோள் இன்றித், தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி, உள்நின்று அகன்ற உரையோடு புணர்ந்து, நுண்ணிதின் விளக்கல் அது அதன் பண்பே. தொல்.1422.

நூல் என்பது முதலும் முடிவும் மாறுபடாமல் இருப்பது; தொகுத்தும் / வகுத்தும் கருதிய பொருளை எடுத்துக் காட்டுவது; சுருக்கமாகச் சொல்லப்பட்ட பொருளை விரித்துச் சொன்ன உரையுடன் இணையத்தக்கது; நுட்பமாக விளக்கும் பண்புடையது. (பக்.22,23, 24,25).

வாய்மை : நிலம் பெயரினும் நின்சொல் பெயரல் – புறம்.3. நிலம் பிறழ்ந்தாலும், நீ சொன்ன சொல்லில் பிறழாது இருத்தல் வேண்டும். (பக்.28, 29).

கொடை : இல்என இரந்தோர்க்கு  ஒன்று  ஈயாமை இழிவு கலி. 2.பொருள் இல்லை என்று கூறி, இரந்தவர்க்கு சிறிதும் கொடுக்காமல் இருப்பது இகழ்ச்சிக்குரியது. (பக்.76,77). வெளியீடு தஞ்சாவூர் அகரம் பதிப்பகம்.

# பேராசிரியர் விஸ்வநாதன்-வாசகர் பேரவை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top