புதுக்கோட்டை அருகே அம்மையப்பட்டி மண்டலமுடைய அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
புதுக்கோட்டை அருகே அம்மையப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள மண்டலமுடைய அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களால் மாட்டு வண்டி எல்லை பந்தயம் புதுக்கோட்டை அரிமளம் சாலையில் உள்ள அம்மையப்பட்டி கிராமத்தில் நடைபெற்றது.
இதில் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி திருச்சி, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நடு மாடு 6 ஜோடிகளும் பூஞ்சிட்டு மாடுகளில் 13 ஜோடிகளும் பங்கேற்றன.
இரண்டு பிரிவினாக ந இந்நிகழ்ச்சிக்கு நடத்தப்பட்ட போட்டியில் ஆறு மைல் தொலைவுக்கு போட்டியில் எல்கை நிர்ணயிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. எல்கையில் நின்று கொடியை அசைத்தவுடன் எல்லையை கடந்து செல்ல சாலையில் மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்து சென்றன.
பந்தயத்தை சாலையின் இரு புறம் இருந்த பொதுமக்கள் ஆரவாரத்துடன் கண்டு களித்தனர். இந்தப் பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. அதேபோன்று சிறப்பாக மாட்டு வண்டியை ஓட்டிய சாரதிக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், போட்டிக்கான பாதுகாப்பு பணிகளில் திருக்கோகர்ணம் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.