Close
நவம்பர் 22, 2024 3:03 காலை

இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி காவல்துறையிடம் தபெதிக மனு

ஈரோடு

ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்த தபெதிகவினர்

சென்னிமலையில் வரும் 13 -ஆம் தேதி இந்து முன்னணி சார்பில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் ஈரோடு எஸ்.பி.யிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் ந.வெ.குமரகுருபரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த செப்டம்பர் மாதம் 17 -ஆம் தேதி ஈரோடு அருகே சென்னிமலையில் கிறிஸ்தவர்களுக்கு சொந்தமான வீட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெபம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கே புகுந்த இருபதுக்கும் மேற்பட்ட இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த நபர்கள் உள்ளே புகுந்து ஜெபம் செய்து கொண்டிருந்தவர்களை தாக்கினர்.

இனிமேலும் ஜெபம் செய்தால் தொலைத்து விடுவோம் என்று கூறி கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இது தொடர்பாக கிறிஸ்தவர்கள் கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்து முன்னணியைச் சேர்ந்த சிலர் சென்னிமலையில் வரும் 13 -ஆம் தேதி மாலை கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக துண்டு பிரசுரம் மூலமாக அறிவித்துள்ளனர்.இது தொடர்பாக youtube மூலமாகவும் பரப்புரை செய்து வருகின்றனர்.

இதன் காரணமாக சென்னிமலையில் ஒரு விதமான பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.எனவே மத வெறியை தூண்டுகிற வகையிலும் குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக பேசி மத கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் ஆர்எஸ்எஸ் சங் பரிவார் மற்றும் இந்து முன்னணி அமைப்புகள் இயங்கி வருகின்றன.இந்த அமைப்புகள் அறிவித்துள்ள ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்கக் கூடாது.

அவ்வாறு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளித்தால் வரும் 15 -ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் அதன் தலைவர் கோவை கு.ராமகிருஷ்ணன் தலைமையில் நாங்களும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம் என்றும் தெரிவித்தனர்.

# செய்தி- மு.ப. நாராயணசுவாமி # 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top