எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனமும் புதுக்கோட்டை வாசகர் பேரவையும் இணைந்து நடத்திய அறிவியல் வினாடி வினாப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.
ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்ட மாணவர் களுக்கான அறிவியல் வினாடி வினாப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா புதுக்கோட்டை எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்விற்கு எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார் தலைமை வகித்து பேசியதாவது: 5 ஸ்டார் நிதி குழுமம் உதவியுடன் எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் புதுக்கோட்டையில் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது.
ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்டத்தில் முதல் கட்டமாக ராஜகோபாலபுரம் பள்ளி மாணவர்கள் இத்திட்டத் தில் பங்கேற்று வருகிறார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடங்கப்பட்ட திட்டத்தில் முதன் முதலாக பங்கேற்ற பெருமை இந்த பள்ளி மாணவர்களுக்கு உள்ளது.
மாணவர்களிடையே படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்த அறிவியல் வினாடி வினா நடத்தப்படு கின்றது. இது மாணவர்களின் அறிவியல் அறிவை மேம்படுத்த உதவியாக அமையும் என்றார். வாசகர் பேரவையின் ஆலோசகர் சத்தியராம் ராமுக்கண்ணு மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்திப் பேசியதாவது:
எம். எஸ். சுவாமிநாதன் உலக புகழ்பெற்ற விஞ்ஞானி. அவரால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனத்தின் விழாவில் பங்கேற்பதில் பெறுமையடைகிறேன். இத்திட்டம் ஒரு புதுமையான மிகச்சிறந்த திட்டமாகும். மாணவர்களின் அறிவியல் மனப்பான்மை மற்றும் அறிவியல் விழிப்புணர்வு களை மேம்படுத்த மிக்க உதவியாய் அமையும்.
மாணவர்கள் தங்களுடைய அறிவை மேம்படுத்துவதற்கு நல்ல புத்தகங்களை தொடர்ச்சியாக படிக்க வேண்டும். கண்டிப் பாக ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்கள் சிறந்த அறிவியல் மனப்பான்மை மிக்க மாணவர்களாக வருவார்கள் என்பதில் ஐயமில்லை. எனவே மாணவர்கள் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்றார். நிகழ்வில் ஆசிரியர் எம்.குமரேசன் மாணவர்களை வாழ்த்திப் பேசினார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன் மற்றும் மாவட்டக் குழந்தைகள் நலக்குழுத் தலைவர் கே.சதாசிவம் ஆகியோர் வினாடி வினாவை ஒருங்கிணைத்து நடத்தினார்கள்.
பின்னர் பரிசளிப்பு விழாவில் வாழ்த்துரை வழங்கினார்கள். ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்ட ஆசிரியர் பி.மீனா அனைவரையும் வரவேற்றார். கள ஒருங்கிணைப் பாளர் டி.விமலா நன்றி கூறினார்.