Close
மே 21, 2024 7:01 காலை

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண், பெண், திருநங்கை உள்பட மொத்தம் 13 லட்சத்து 36 ஆயிரத்து 605 வாக்காளர்கள்

புதுக்கோட்டை

வாக்காளர் பட்டியல் சிறப்பு முறை சுருக்கத் திருத்தம் 2024 -ன் இறுதி வாக்காளர் பட்டியலினை வெளியிட்ட ஆட்சியர் மெர்சிரம்யா

2024-ஆம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 13 லட்சத்து 36 ஆயிரத்து 605 வாக்காளர்கள்  இடம் பெற்றுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு முறை சுருக்கத் திருத்தம் 2024 -ன் இறுதி வாக்காளர் பட்டியலினை, புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா  (22.01.2024) அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

பின்னர் புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சியர்  தெரிவித்ததாவது;

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர்பட்டியல் சிறப்பு முறை சுருக்கத் திருத்தம் – 2024 க்கான இறுதி வாக்காளர் பட்டியல் (Final Electoral Roll) (22.01.2024) வெளியிடப்படுகிறது. அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 6,60,574 ஆண் வாக்காளர்கள், 6,75,969 பெண் வாக்காளர்கள் மற்றும் 62 மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்த்து மொத்தம் 13,36,605 வாக்காளர்கள் 2024-ஆம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலில் (Final Electoral Roll) இடம் பெற்றுள்ளனர்.

2024-ஆம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியலில்  (Integrated Draft Roll)  (27.10.2023-இன் படி) மொத்தம் 13,15,798 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். 27.10.2023 முதல் 09.12.2023 வரை நடைபெற்ற 2024-ஆம் ஆண்டிற்கான சிறப்புமுறை சுருக்கத் திருத்தத்தின்போது (ளுpநஉயைட ளுரஅஅயசல சுநஎளைழைn) 13,809 ஆண் வாக்காளர்கள், 17,552 பெண் வாக்காளர்கள் மற்றும் 03 மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்த்து மொத்தம் 31,364 வாக்காளர்கள்; புதிதாக (Inclusion) சேர்க்கப்பட்டுள்ளனர்.

27.10.2023 முதல் 09.12.2023 வரை நடைபெற்ற 2024-ஆம் ஆண்டிற்கான சிறப்புமுறை சுருக்கத் திருத்தத்தின்போது 4,794 ஆண் வாக்காளர்கள், 5,758 பெண் வாக்காளர்கள் மற்றும் 5 மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்த்து மொத்தம் 10,557 வாக்காளர்கள்; நீக்கம்  (Deletion) செய்யப் பட்டுள்ளனர்.

27.10.2023 முதல் 09.12.2023 வரை நடைபெற்ற 2024-ஆம் ஆண்டிற்கான சிறப்புமுறை சுருக்கத் திருத்தத்தின்போது மொத்தம் 9,139 மனுக்கள் பெறப்பட்டு 8,797 மனுக்கள் திருத்தம் (Modifications) மற்றும் முகவரி மாற்றம்(Shifting)செய்யப் பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,559 வாக்குச்சாவடி மையங்கள் (Polling Stations) உள்ளன. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில்; நகர எல்கைக்குள் (Urban) 83 வாக்குச்சாவடி அமைவிடங்கள் மற்றும் கிராம எல்கைக்குள் (Rural) 864 வாக்குச்சாவடி அமைவிடங்கள் என மொத்தம் 947 வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி அமைவிடங்கள் (Designated Locations) உள்ளன. 2024 -ஆம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலில் 18-19 வயதுடைய 21,142 இளம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர் என புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் அலுவலர்ஃ மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா  தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல், வருவாய் கோட்டாட்சியர்கள் முருகேசன் (புதுக்கோட்டை), சிவக்குமார் (அறந்தாங்கி), தெய்வநாயகி (இலுப்பூர்), தனி வட்டாட்சியர் (தேர்தல்)  அ.சோனை கருப்பையா, அனைத்து வட்டாட்சியர்கள், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top