Close
மே 17, 2024 5:19 மணி

நலவாரியத்தில் அழிந்து போன தொழிலாளர்களின் விவரங்களை மீண்டும் பதிவு செய்ய வலியுறுத்தல்

தஞ்சாவூர்

தஞ்சையில் நடைபெற்ற ஏஐடியூசி மாவட்ட பொதுக்குழு மாவட்ட பொதுக்குழு கூட்டம்  மாவட்ட தலைவர் வெ.சேவையா தலைமையில் நடைபெற்றது

நலவாரியத்தில் பதிவு செய்துள்ள பல லட்சக்கணக்கான ஆவணங்கள் அழிந்து போய் உள்ளது! குறைபாடுகளை சரி செய்து மீண்டும் அவர்களது ஆவணங்களை நல வாரியம் பொறுப்பேற்று இலவசமாக பதிவு செய்ய வேண்டும் ஏஐடியுசி வலியுறுத்தியுள்ளது.

தஞ்சையில் நடைபெற்ற ஏஐடியூசி மாவட்ட பொதுக்குழு மாவட்ட பொதுக்குழு கூட்டம்  மாவட்ட தலைவர் வெ.சேவையா தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட பொதுச் செயலாளர் நடைபெற்ற பணிகள் குறித்து பேசினார். தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.சந்திரகுமார் தேசிய குழு மற்றும் மாநில குழு முடிவுகள் பற்றி விரிவாக பேசினார். பொருளாளர் தி.கோவிந்தராஜன் வரவு செலவு தாக்கல் செய்தார்.கூட்டத்தில் மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன்,

நுகர்பொருள் வாணிபக் கழக சுமை சங்க மாநில தலைவர் அ.சாமிக்கண்ணு, பட்டு கைத்தறி சம்மேளன தலைவர் கோ.மணிமூர்த்தி, மீனவர் சங்க மாவட்ட செயலாளர் நா.காளிதாஸ், தெரு வியாபார சங்க மாவட்ட செயலாளர் ஆர்.பி. முத்துக்குமரன்,கட்டுமான சங்க மாவட்ட துணைச் செயலாளர் சீனி. சுகுமாறன்,

துணைத்தலைவர் பி.செல்வம், கும்பகோணம் ஏஐடியூசி மாநகர பொறுப்பாளர் சரவணன்,மின்வாரிய சங்க மாநிலத் துணைத் தலைவர் பொன். தங்கவேல்,நிர்வாகிகள் எம்.ராஜகோபால், கே.நாகராஜன், ஓய்வு சங்க நிர்வாகிகள் கே.லட்சுமணன், எம்.கணேசன், டாஸ்மாக் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.கோடீஸ்வரன், பொருளாளர் என்.இளஞ்செழியன்,

உடல் உழைப்பு சங்க மாவட்ட பொருளாளர் பி.சுதா, நிர்வாகிகள் எஸ்.பரிமளா, கே.கல்யாணி, பேராவூரணி சுமை சங்க வி.சுரேஷ் , த.காளிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் உடல் உழைப்பு, கட்டுமான, உள்ளிட்ட அமைப்புகளில் பதிவு செய்துள்ள பல இலட்சக்கணக்கான உறுப்பினர்களின் ஆவணங்கள் அனைத்தும் முழுமையாக அழிந்து போய் உள்ளது. நலவாரியத்தில் அழிந்து போய் உள்ள உறுப்பினர் ஆவணங்களை மீண்டும் பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆவணங்கள் அழிந்து போகும் அளவுக்கு நலவாரிய மெத்தனமான, நடவடிக்கைகள், குளறுபடிகளை இக் கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. நாலவாரியத்தில் பதிவு செய்துள்ள அனைத்து உறுப்பினர் ஆவணங்களையும் நலவாரியம் பொறுப்பேற்று இலவசமாக ஆன்லைன் பதிவுகளை செய்து தர தமிழ்நாடு அரசை தஞ்சை மாவட்ட ஏஐடியூசி பொதுக்குழு கூட்டம் வலியுறுத்துகிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் நூறுநாள் வேலையை 200 நாளாக அறிவித்து நடைமுறைப்படுத்தவும்,தின ஊதியத்தை ரூபாய் 600ஆக உயர்த்தி வழங்க வேண்டும், தமிழ்நாட்டிற்கு நூறுநாள் வேலைத்திட்டத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியை உடனடியாக வழங்கவும், பட்டு கைத்தறி ஜவுளி ரகங்களுக்கு ஆண்டு முழுவதும் ரிபேட் வழங்க வேண்டும் என ஒன்றிய அரசை இக் கூட்டம் வலியுறுத்துகிறது.

கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், அரசு பணி உள்ளிட்டு பல்வேறு பணிக்கு செல்வோர், மருத்துவ சிகிச்சைக்கு செல்வோர் அரசு பேருந்திற்காக மணிக்கணக்கில் காத்திருப்பதை கவனத்தில் கொண்டு அரசு போக்குவரத்துக் கழகம் காலை, மாலை நேரங்களில் கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும், நிறுத்தப்பட்டுள்ள அனைத்து பேருந்துக ளையும் முழுமையாக இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top