Close
ஜூன் 30, 2024 4:43 மணி

கிணற்றில் விழுந்த பெண்ணைக் காப்பாற்றியபோது உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு: எம்எல்ஏ சின்னதுரை கோரிக்கை

புதுக்கோட்டை

எம்எல்ஏ சின்னத்துரை

தனது உயிரை தியாகம் செய்து  இளம்பெண்ணைக் காப்பாற்றிய இளைஞரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென கந்தர்வகோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை வலியுறுத்தியு ள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, கீழாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கட்ராம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சோமன் மகள் சுந்தரி (21). இவர் 21.01.2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் தனது வீட்டு அருகில் உள்ள கிணற்றில் எதிர்பாராத விதமாக  தவறி விழுந்துவிட்டார். இதனைப் பார்த்த அதே ஊரைச் சேர்ந்த அர்ச்சுணன் மகள் முத்துக்காளை (எ) முத்துக்குமார் (29) உடனடியாக கிணற்றுக்குள் குதித்து சுந்தரியை மீட்டுள்ளார்.

அந்த கிணறு பல ஆண்டுகளாக பயன்பாடற்ற நிலையில் இருந்த பொதுக் கிணற்றில் இருந்த மிகவும் அசுத்தமான தண்ணீருக்குள் நீண்ட நேரமாகப் போராடியதால் மயக்க மடைந்த முத்துக்காளை நீருக்குள் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டார். பின்னர், தீயணைப்பு நிலையத்தினர் சடலத்தை மீட்டனர். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் கூராய்வுக்குப்பிறகு 22..01.2024 திங்கள்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

திங்கள்கிழமை கட்ராம்பட்டியில் வைக்கப்பட்டிருந்த முத்துக்காளையின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை தெரிவித்ததாவது:

ஒரு இளம் பெண்ணைக் காப்பாற்றுவதற்காக தனது உயிரைப் பணயம் வைத்து இளைஞர் முத்துக்காளை தனது உயிரை தியாகம் செய்துள்ளார். இது வீரதீரச் செயலுக்கு ஒப்பானது. படித்த இளைஞரான முத்துக்காளையை நம்பித்தான் அவரது குடும்பம் இருந்தது.

எனவே, தமிழ்நாடு அரசு இதில் சிறப்புக் கவனம் செலுத்தி முத்துக்காளையின் குடும்பத்திற்கு உயிரை இழப்பீடு வழங்க வேண்டும். இதுகுறித்து தொகுதியின் அமைச்சரான சிவ.வீ.மெய்யநாதனிடமும் பேசியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top